பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் லாகூர் காலண்டர்ஸிடம் தோற்ற முல்தான் சுல்தான்ஸ் அணி அடுத்த போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸை எதிர்கொண்டது. இந்த டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முல்தான் சுல்தான்ஸ் அணி:
முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், ரைலீ ரூசோ, டேவிட் மில்லர், கைரன் பொல்லார்டு, குஷ்தில் ஷா, அகீல் ஹுசைன், உஸாமா மிர், சமீன் குல், அப்பாஸ் அஃப்ரிடி, ஈசானுல்லா.
ரஞ்சி டிராபி: அரையிறுதியில் பெங்கால் & சௌராஷ்டிரா அணிகள் அபார வெற்றி..! ஃபைனலில் பலப்பரீட்சை
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி:
ஜேசன் ராய், மார்டின் கப்டில், உமர் அக்மல், சர்ஃபராஸ் அகமது (கேப்டன், விக்கெட் கீப்பர்), முகமது ஹஃபீஸ், இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், அப்துல் பங்கல்ஸாய், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், நுவான் துசாரா.
முதலில் பேட்டிங் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, முல்தான் சுல்தான்ஸ் அணியின் 20 வயது இளம் ஃபாஸ்ட் பவுலர் ஈசானுல்லாவிடம் மண்டியிட்டு சரணடைந்தது. குவெட்டா அணியில் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அபாரமாக பந்துவீசிய ஈசானுல்லா 4 ஓவரில் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். வெறும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி.
IND vs AUS: அவருக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுங்க.. சரியா வரலைனா தூக்கிருங்க..! கவாஸ்கர் கருத்து
111 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத் 3 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ரைலீ ரூசோ அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் ரூசோ 78 ரன்கள் அடிக்க, 14வது ஓவரிலேயே இலக்கை அடித்து முல்தான் சுல்தான்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
