ரஞ்சி டிராபி அரையிறுதியில் பெங்கால் மற்றும் சௌராஷ்டிரா அணிகள் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியுள்ளன.
ரஞ்சி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பெங்கால், கர்நாடகா, சௌராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் பெங்கால் - மத்திய பிரதேசம் அணிகளும், கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளும் மோதின.
பெங்கால் - சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி வீரர்கள் சுதிப் கரமி(112) மற்றும் அபிஜித் மஜும்தர் (120) ஆகிய இருவரின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் பெங்கால் அணி 438 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய மத்திய பிரதேசம் அணி வெறும் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
268 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய பெங்கால் அணியில் மஜும்தர் 80 ரன்களையும், பிரதிப்தா 60 ரன்களும் அடிக்க, 279 ரன்கள் அடித்தது. பெங்கால் அணி மொத்தமாக 547 ரன்கள் முன்னிலை பெற, 548 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிய மத்திய பிரதேச அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 306 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்கால் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதம் அடித்தார். மயன்க் 249 ரன்களை குவிக்க, கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய சௌராஷ்டிரா அணியின் கேப்டன் அர்பிட் வசவடாவும் இரட்டை சதமடித்தார். வசவடா 202 ரன்களையும், அபாரமாக ஆடி சதமடித்த சீனியர் வீரர் ஷெல்டான் ஜாக்சன் 160 ரன்களையும் குவிக்க,சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 527 ரன்களை குவித்தது.
120 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய கர்நாடகா அணி, நிகின் ஜோஸின் அபாரமான சதத்தால்(109) 2வது இன்னிங்ஸில் 234 ரன்கள் அடித்தது. 114 ரன்கள் மட்டுமே கர்நாடகா அணி முன்னிலை பெற, 115 ரன்கள் என்ற இலக்கை அடித்து சௌராஷ்டிரா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.
IND vs AUS: அவருக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுங்க.. சரியா வரலைனா தூக்கிருங்க..! கவாஸ்கர் கருத்து
சௌராஷ்டிரா - பெங்கால் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி வரும் 16ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்குகிறது.
