Asianet News TamilAsianet News Tamil

நடுவருடன் வாக்குவாதம்: தோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் இறுதிப்போட்டியில் விளையாட தடை?

சிஎஸ்கே வீரர் பத்திரனாவுக்காக தோனி நடுவருடன் வாக்குவாதம் ஈடுபட்டது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் இறுதிப் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

If action is taken against Dhoni, will he be banned from playing in the IPL final?
Author
First Published May 24, 2023, 9:03 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்தது. பின்னர் 173 ரன்களை இலக்காக கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி ஆடியது. இதில், விருத்திமான் சஹா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 8 ரன்னிலும், தசுன் ஷனாகா 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டேவிட் மில்லர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். போட்டியின் 12ஆவது ஓவரை பத்திரனா வீசினார். அந்த ஓவரில் மட்டும் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில், 4 வைடுகளும் அடங்கும்.

பிசிசிஐயின் புதிய ஐடியா: ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்கள் நட முடிவு!

அதன் பிறகு ஓய்வு எடுக்க வெளியில் சென்ற பத்திரனா 9 நிமிடங்கள் ஓய்வு எடுத்த பிறகு 15ஆவது ஓவரின் போது மீண்டும் களத்திற்கு வந்து 4 நிடமிங்கள் பீல்டிங் செய்துள்ளார். அதன் பிறகு 16ஆவது ஓவரை அவர் வீச அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு நடுவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அப்போது குறுக்கிட்ட தோனி, ஏன் என்று விளக்கம் கேட்டு நடுவர்களுடன் வாக்கு வாதம் செய்துள்ளார்.

மும்பையா? லக்னோவா? வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

ஆனால், தோனி ஏன், அவ்வாறு செய்தார் என்பதற்கான காரணம் என்னவென்றால், ஒரு பவுலர் வெளியில் எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்கிறாரோ, அவ்வளவு நேரம் மைதானத்திற்குள் இருக்க வேண்டும். ஆனால், பத்திரனா 9 நிமிடங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே பீல்டிங் செய்துள்ளார். இதன் காரணமாக அவர் பந்து வீச மறுக்கப்பட்டுள்ளார்.

அப்ஸ்டாக்கிற்கு தெரியுது, உங்களுக்கு தெரியவில்லை: ரவீந்திர ஜடேஜா வேதனை டுவீட் – எங்க அணிக்கு வாங்க!

மேலும், மூன்றாவது நடுவர்களும் நேரம் ஆகிக் கொண்டிருப்பதை வெளியில் இருந்து சுட்டிக் காட்டினர். ஆனால், பத்திரனா 16ஆவது ஓவரை வீசாமல், வேறொரு பவுலர் 16ஆவது ஓவரை வீசினால், ரஷீத் கான் அதிக ரன்கள் குவிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆதலால், பத்திரனாவுக்காக தோனி அந்த 5 நிமிடமும் நடுவருடன் வாக்குவாதத்திலேயே இருந்துள்ளார்.

அடுத்த வருசம் ஹல்லா போல், கொஞ்சம் பலமா போல் - சிஎஸ்கேவுக்கு ஆதரவு கொடுத்த அஸ்வின்!

ஆனால், போட்டி தாமதமாவதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. போட்டி தாமதமானால், ஓவர் ரேட் காரணமாக கடைசி சில ஓவர்கள் 4 பீல்டர்கள் மட்டுமே 30 யார்டு வட்டத்திற்கு வெளியில் நிற்க வைக்க நேரிடும். மேலும், பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதன் காரணமாகவும் தோனிக்கு அபராதம் விதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதோடு, இறுதிப் போட்டியில் விளையாட தடை கூட விதிக்க கூடும்.

அடுத்த சீசனில் விளையாடலாமா? வேண்டாமா? டிசம்பரில் தான் முடிவு எடுப்பேன் – தோனி!

இதையெல்லாம் யோசித்த தோனி அதைப்பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் பத்திரனாவுக்காக 5 நிமிடங்கள் காத்திருந்தார். சரியாக 9 நிமிடங்கள் ஆன பிறகு மீண்டும் பத்திரனா பந்துவீச அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்திரனா வீசிய 16ஆவது ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 13 ரன்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடுவருடன் வாக்குவாதம் செய்து நேரத்தை வீணடித்த தோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவருக்கு தடை விதிக்கப்படலாம். அப்படி தடை விதிக்கப்பட்டால் இறுதிப் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios