Asianet News TamilAsianet News Tamil

TNPL 2022: ரூபி திருச்சி வாரியர்ஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

ரூபி திருச்சி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

idream tiruppur tamizhans win toss opt to field against ruby trichy warriors in tnpl 2022
Author
Thirunelveli, First Published Jun 27, 2022, 7:28 PM IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

திருநெல்வேலியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இதையும் படிங்க - பையன் செம டேலண்ட்.. ஐபிஎல்லில் கண்டிப்பா ஆடுவான்! அயர்லாந்து இளம் வீரருக்கு பேட் கொடுத்து புகழ்ந்த பாண்டியா

திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு இதுதான் முதல் போட்டி. திருச்சி வாரியர்ஸ் அணி அதன் முதல் போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று 2வது வெற்றியை பதிவுசெய்யும் முனைப்பில் திருச்சி அணியும், முதல் போட்டியிலேயே வெற்றி பெறும் முனைப்பில் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் களமிறங்கியுள்ளன.

இதையும் படிங்க - IRE vs IND டி20: இத்தனை வருஷமா தோனி, கோலி, ரோஹித் செய்யாத சாதனையை செய்த ஹர்திக் பாண்டியா

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி:

ஸ்ரீகாந்த் அனிருதா (கேப்டன்), எஸ் சித்தார்த், சுப்ரமணியன் ஆனந்த், மான் பஃப்னா, சுரேஷ் குமார், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), ஆர் ராஜ்குமார், எம் முகமது, அஸ்வின் கிறிஸ்ட், எஸ் மோகன் பிரசாத், லக்‌ஷ்மி சத்தியநாராயணன்.

இதையும் படிங்க - உலக கோப்பை வின்னிங் கேப்டனுக்கு நேர்ந்த பரிதாபம்.. இயன் மோர்கன் ஓய்வு..! இங்கி.,அடுத்த கேப்டன் இவரா..?

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி:

அமித் சாத்விக், முரளி விஜய், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் (விக்கெட் கீப்பர்), முகமது அட்னான் கான், ஆண்டனி தாஸ், பி சரவண குமார், ராஹில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, அஜய் கிருஷ்ணா, எம் மதிவண்ணன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios