நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் வெறும் 117 ரன்கள் மட்டுமே அடித்து 118 ரன்கள் என்ற எளிய இலக்கை நெல்லை அணிக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.
கோயம்பத்தூரில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இதையும் படிங்க - 2022 டி20 உலக கோப்பையை கண்டிப்பா இந்த அணிதான் வெல்லும்..! ஷாஹித் அஃப்ரிடி ஆருடம்
திருப்பூர் தமிழன்ஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. மான் பஃப்னா அதிகபட்சமாக 37 ரன்கள் அடித்தார்.
அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. நெல்லை அணி பவுலர்கள் அபாரமாக பந்துவீசி திருப்பூர் அணியை வெறும் 117 ரன்களுக்கு சுருட்டினர். நெல்லை அணி சார்பில் ஈஸ்வரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஹரிஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க - ENG vs IND: 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! விராட் கோலிக்கு இடம் இருக்கா இல்லையா..?
நெல்லை ராயல் கிங்ஸ் அணி 118 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவருகிறது.
