தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 145 ரன்கள் அடித்து, 146 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சித்தார்த் (0) மற்றும் அனிருதா (8) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய எஸ்.அரவிந்த் சிறப்பாக ஆடி 32 ரன்கள் அடித்தார்.

மான் பஃப்னா 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே அடித்தார். பின்வரிசையில் இறங்கிய எம் முகமது 18 பந்தில் 27 ரன்களும், கிறிஸ்ட் 20 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 145 ரன்கள் அடித்து, திண்டுக்கல் டிராகன்ஸுக்கு 146 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது திருப்பூர் தமிழன்ஸ் அணி.

திண்டுக்கல் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய சிலம்பரசன் 4 ஓவரில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹரி நிஷாந்த் மற்றும் சுதேஷ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.