Asianet News TamilAsianet News Tamil

ICC WTC: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்டுக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
 

ICC WTC points table update after Pakistan vs Australia first test
Author
Chennai, First Published Mar 8, 2022, 7:19 PM IST

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில், ஒவ்வொரு அணியும் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றிகளை வைத்து வெற்றி விகிதங்கள் கணக்கிடப்பட்டு, அதன்படி வரிசைப்படுத்தப்படுகின்றன. ஃபைனலுக்கு முன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். 

கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவும் நியூசிலாந்தும் ஃபைனலில் மோதின. நியூசிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. ஆனால் இம்முறை இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளன.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் வெற்றி பெற்று 100 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்த இலங்கை அணி, இந்தியாவிடம் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, 66.66 என்ற வெற்றி சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது. 2ம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:

ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி 4-0 என தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, 86.66 வெற்றி சதவிகிதத்துடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிராவானதற்கு பிறகும் முதலிடத்திலேயே தான் நீடிக்கிறது. ஆனால் வெற்றி சதவிகிதம் 77.77 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.  இந்த போட்டிக்கு பின்னரும், ஆஸ்திரேலியா முதலிடத்திலும், பாகிஸ்தானும் இரண்டாமிடத்திலும் தான் உள்ளன. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவிகிதம் 86.66 சதவிகிதத்திலிருந்து 77.77 சதவிகிதமாக குறைந்துள்ளது. பாகிஸ்தான் அணி 66.66 வெற்றி சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் உள்ளது.  இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்ற இலங்கை அணி 100 சதவிகிதத்திலிருந்து 66.66 சதவிகிதமாக குறைந்து புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. 

தென்னாப்பிரிக்க அணி 60 வெற்றி சதவிகிதத்துடன் 4ம் இடத்தில் உள்ளது. இந்திய அணி இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகும்  புள்ளி பட்டியலில் 5ம் இடத்திலேயே நீடிக்கிறது. ஆனால் வெற்றி சதவிகிதம் 54.16%ஆக அதிகரித்துள்ளது. புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 6ம் இடத்திலும், இங்கிலாந்து அணி கடைசி இடத்திலும் உள்ளன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios