Asianet News TamilAsianet News Tamil

ICC WTC: புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. கடைசி இடத்தில் இங்கிலாந்து

கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
 

icc wtc points table after ashes last test
Author
Chennai, First Published Jan 16, 2022, 9:48 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. 2019 - 2021ல் நடத்தப்பட்ட முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து வென்றது. 2021 - 2023 வரையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில், வெறும் இரண்டே டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி அந்த இரண்டிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4 போட்டிகளில் 3ல் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஒரு போட்டி டிரா ஆனது. 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 83.33 சதவிகித வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருந்தது ஆஸ்திரேலிய அணி, கடைசி டெஸ்ட்டிலும் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதால், 83.33லிருந்து 86.66ஆக வெற்றி சதவிகிதம் உயர்ந்துள்ளது. 86.66 சதவிகித வெற்றியுடன் 2ம் இடத்தில் நீடிக்கிறது ஆஸ்திரேலிய அணி. 

இலங்கை அணி வெறும் இரண்டே போட்டிகளில் ஆடிவிட்டு முதலிடத்தில் நீடிக்கிறது. விரைவில் இலங்கை அணி பின்னுக்கு வந்துவிடும். ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துவிடும். 

பாகிஸ்தான் அணி 75 சதவிகிதத்துடன் 3ம் இடத்தில் உள்ளது. 4ம் இடத்தில் இருந்த இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, 49.07 சதவிகிதத்துடன் 5ம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்ட்டில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 66.66 வெற்றி சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ஆஷஸ் தொடரில் தொடர் தோல்விகளை தழுவிவரும் இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios