ICC WTC: நியூசிலாந்தின் கையில் இந்திய அணியின் குடுமி..! மார்ச் 13 இந்திய அணிக்கு முக்கியமான தினம்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறுவதில் இந்திய அணியின் வாய்ப்பு நியூசிலாந்திடம் உள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வெற்றி விகிதங்களின் அடிப்படையில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலுக்கு முன்னேறும். அந்தவகையில், இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக முன்னேறிவிட்டது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு 2வது அணியாக முன்னேறும் வாய்ப்பு இந்தியா - இலங்கை ஆகிய 2 அணிகளுக்குமே உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அகமதாபாத்தில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஃபைனலுக்கு முன்னேறிவிடும்.
ஒருவேளை இந்திய அணி தோற்றாலோ, இந்த போட்டி டிராவில் முடிந்தாலோ, நியூசிலாந்தை 2-0 என டெஸ்ட் தொடரில் இலங்கை ஒயிட்வாஷ் செய்தால் இலங்கை அணி ஃபைனலுக்கு முன்னேறிவிடும்.
IND vs AUS: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி.! முதல் இன்னிங்ஸில் இந்தியா 91 ரன்கள் முன்னிலை
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4ம் நாள் ஆட்ட முடிவில் தான் முதல் இன்னிங்ஸே முடிந்தது. 4ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் அடித்துள்ளது. கடைசிநாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 91 ரன்களுக்குள்ளாக ஆல் அவுட் செய்ய வேண்டும். இல்லையென்றால், ஆஸி., அணி கூடுதலாக ரன் அடித்து ஆல் அவுட்டாகும் பட்சத்தில் அந்த கூடுதல் இலக்கை அடித்து வெற்றி பெற வேண்டும். கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்டாவது சந்தேகமே. எனவே இந்த டெஸ்ட் டிராவில் முடியவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அதனால் இலங்கை அணியை நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட்டிலாவது வீழ்த்தவேண்டும். நியூசிலாந்து - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டமும் நாளையே நடக்கிறது. கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 355 ரன்களும், நியூசிலாந்து அணி 373 ரன்களும் அடித்தன. 18 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 302 ரன்கள் அடித்தது. 320 ரன்கள் இலங்கை முன்னிலை பெற, 321 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய நியூசிலாந்து அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் அடித்துள்ளது.
விராட் கோலி வாரிக்குவித்த சாதனைகளின் பட்டியல்.! லெஜண்ட்ஸ் லிஸ்ட்டில் சாதனை நாயகன் கோலி
கடைசி நாள் ஆட்டத்தில் இலங்கையின் வெற்றிக்கு 257 ரன்கள் தேவை. இந்தியா - ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தால், நியூசிலாந்தின் உதவி இந்திய அணிக்கு தேவை. இலங்கையை நியூசிலாந்து ஒரு டெஸ்ட்டிலாவது வீழ்த்தினால் தான் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறமுடியும். எனவே இந்த 2 போட்டிகளின் கடைசி நாள் ஆட்டமான நாளைய ஆட்டம் இந்திய அணிக்கு மிக முக்கியம்.