விராட் கோலி வாரிக்குவித்த சாதனைகளின் பட்டியல்.! லெஜண்ட்ஸ் லிஸ்ட்டில் சாதனை நாயகன் கோலி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட்டில் விராட் கோலி அடித்த சதத்தின் மூலம் அவர் படைத்த சாதனைகளை பார்ப்போம்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவாஜா(180) மற்றும் கேமரூன் க்ரீனின் அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் சதமடித்தார். கில் 128 ரன்களை குவித்தார். அவரைத்தொடர்ந்து அபாரமாக ஆடிய விராட் கோலியும் சதமடித்தார். 2019ம் ஆண்டு நவம்பருக்கு பின் மூன்றரை ஆண்டுகள் கழித்து விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்தார். இது டெஸ்ட்டில் விராட் கோலியின் 28வது சதமாகும்.
2வது டெஸ்ட்டிலும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா
சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75வது சதத்தை விளாசிய விராட் கோலி, இந்த சதத்தின் மூலம் சில சாதனைகளை தகர்த்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 16 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கருக்கு(20 சதங்கள்) அடுத்து 2ம் இடத்தில் உல்ளார் விராட் கோலி. விரைவில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 20 சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், இங்கிலாந்துக்கு எதிராக 19 சதங்கள் அடித்த டான் பிராட்மேன் 2ம் இடத்திலும், இலங்கைக்கு எதிராக 17சதங்கள் அடித்து சச்சின் மீண்டும் இந்த பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் நிலையில், ஆஸி., மற்றும் இலங்கைக்கு எதிராக தலா 16 சதங்கள் விளாசியுள்ள விராட் கோலி 4 மற்றும் 5ம் இடங்களில் உள்ளார்.
மேலும் சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்(42) மற்றும் ரிக்கி பாண்டிங்(36) ஆகிய இருவருக்கு அடுத்து 35 சதங்களுடன் 3ம் இடத்தில் உள்ளார்.