Asianet News TamilAsianet News Tamil

ஜூன் 7ல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்தியா, இலங்கை? யாருக்கு வாய்ப்பு?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

ICC World Test Championship 2021-23 Final will be played at The Oval From June 7 to 11
Author
First Published Feb 8, 2023, 5:37 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள இந்தியா, இந்த தொடரை 2-0 அல்லது 3-0 அல்லது 3-1 என்று கைப்பற்ற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். புள்ளிப் பட்டியலில் ஏற்கனவே ஆஸ்திரேலியா நம்பர் 1 இடத்தில் உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபியுடன் போஸ் கொடுத்த ரோகித் சர்மா - பேட் கம்மின்ஸ்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வழக்கம் போல இடது கையில் பயிற்சி மேற்கொள்ளாமல் வலது கையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

சதம் அடித்து சாதனை படைத்த 2ஆவது வீரரான ஜிம்பாப்வேயின் கேரி பேலன்ஸ்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு பெரிய உந்துதலாக இருந்து வருகிறது என்று ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை களமிறக்குவது என்பது சிறப்பானதாக இருக்கும். இந்தப் போட்டியின் போது நாங்கள் ஒரு அணியாக வளர்ந்து வந்துள்ளோம். மேலும், வரும் ஜூன் மாதம் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற, முதலில் நாங்கள் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும்.

மைதானம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாக்பூரில் மழை வருமா? 

மேலும், ஆஸ்திரேலியாவை தோற்கடித்து எங்களுக்குரிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை உறுதி செய்து வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே கூறியிருப்பதாவது: வரவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பாக செயல்பட்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவோம் என்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3ஆம் இடம் பிடித்துள்ள இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. 

சதம், சதமா அடிக்கணும், இந்தியா ஜெயிக்கணும்: கேஎல் ராகுல் வேண்டுதல்!

தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் கூறியிருப்பதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நாங்கள் இழந்துவிட்டோம். வெற்றி பெற வேண்டும் என்ற வலியும், வேதனையும் இருக்கத்தான் செய்கிறது. எனினும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கவனம் செலுத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios