பத்தாண்டின் சிறந்த வீரர், பத்தாண்டில் ஒருநாள், டி20, டெஸ்ட் கிரிக்கெட்டுகளின் சிறந்த வீரர், ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரை தேர்வு செய்து விருதுகளை வழங்குகிறது ஐசிசி. அந்தவகையில், கடந்த பத்தாண்டின் சிறந்த வீரர்களுக்கான விருதை பெற பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் விவரங்களை பிரிவு வாரியாக பார்ப்போம்.

ஐசிசியின் பத்தாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள வீரர்கள்:

விராட் கோலி(இந்தியா), டிவில்லியர்ஸ்(தென்னாப்பிரிக்கா), ரவிச்சந்திரன் அஷ்வின்(இந்தியா), ஸ்டீவ் ஸ்மித்(ஆஸ்திரேலியா), குமார் சங்கக்கரா(இலங்கை), ஜோ ரூட்(இங்கிலாந்து), கேன் வில்லியம்சன்(நியூசிலாந்து).

பத்தாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை பெறும் போட்டியில் விராட் கோலி மற்றும் அஷ்வின் ஆகிய 2 இந்திய வீரர்கள் உள்ளனர்.

ஐசிசியின் பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள்:

விராட் கோலி(இந்தியா), ஸ்டீவ் ஸ்மித்(ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆண்டர்சன்(இங்கிலாந்து), ரங்கனா ஹெராத்(இலங்கை), கேன் வில்லியம்சன்(நியூசிலாந்து), யாசிர் ஷா(பாகிஸ்தான்), ஜோ ரூட்(இங்கிலாந்து).

ஐசிசியின் பத்தாண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர்கள்:

விராட் கோலி(இந்தியா), தோனி(இந்தியா), ரோஹித் சர்மா(இந்தியா), டிவில்லியர்ஸ்(தென்னாப்பிரிக்கா), மிட்செல் ஸ்டார்க்(ஆஸ்திரேலியா), மலிங்கா(இலங்கை), குமார் சங்கக்கரா(இலங்கை).

ஐசிசியின் பத்தாண்டின் சிறந்த டி20 வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள்:

கெய்ல்(வெஸ்ட் இண்டீஸ்), ரோஹித் சர்மா(இந்தியா), மலிங்கா(இலங்கை), ரஷீத் கான்(ஆஃப்கானிஸ்தான்), இம்ரான் தாஹிர்(தென்னாப்பிரிக்கா), விராட் கோலி(இந்தியா), ஆரோன் ஃபின்ச்(ஆஸ்திரேலியா).

பத்தாண்டின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என்ற ஐசிசி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர்கள்:

தோனி(இந்தியா), கேன் வில்லியம்சன்(நியூசிலாந்து), அன்யா ஷ்ருப்சோலே(இங்கிலாந்து), ஜெயவர்தனே(இலங்கை), டேனியல் வெட்டோரி(நியூசிலாந்து), விராட் கோலி(இந்தியா), கேத்தரின் ப்ரண்ட்(இங்கிலாந்து), பிரண்டன் மெக்கல்லம்(நியூசிலாந்து), மிஸ்பா உல் ஹக்(பாகிஸ்தான்).