உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகள் இன்று தொடக்கம் – BAN vs SL, RSA vs AFG, NZ vs PAK பலப்பரீட்சை!
உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டிகள் இன்று தொடங்குகிறது. கவுகாத்தி, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத்தில் இந்தப் போட்டிகள் நடக்கிறது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 5 ஆம் தேதி இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, மும்பை, பெங்களூர், லக்னோ, அகமதாபாத், டெல்லி, தர்மசாலா என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டியானது நடத்தப்படுகிறது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு 8ஆவது தங்கம் பெற்றுக் கொடுத்த பாலக் குலியா!
உலகக் கோப்பைக்கான 10 அணி வீரர்களும் நேற்று உறுதி செய்யப்பட்டனர். இதில், சில வீரர்கள் இடம் பெற்றனர். சில வீரர்கள் நீக்கப்பட்டனர். அந்த வகையில் இந்திய அணியிலிருந்து அக்ஷர் படேல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று ஒவ்வொரு அணியும் இந்தியா வந்து நெட் பயிற்சியை தொடங்கியுள்ளன. இந்த நிலையில், இன்று முதல் வரும் 3 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பைக்கான வார்ம் அப் பயிற்சி போட்டிகள் நடக்கிறது. வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கான இடையிலான போட்டி கவுகாத்தி மைதானத்திலும், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது திருவனந்தபுரத்திலும், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது ஹைதராபாத்திலும் நடக்கிறது.
ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் நேற்று ஹைதராபாத் வந்துள்ளனர். பாகிஸ்தானின் உணவு அட்டவணையில் அவர்களுக்கு மட்டன், பட்டர் சிக்கன், மட்டன் சாப்ஸ் வறுக்கப்பட்டது, மீன் வறுக்கப்பட்டது ஆகியவை கொண்ட பட்டியலை கொடுத்துள்ளது. ஆனால், இந்தியாவில் தங்கியிருக்கும் 10 அணிகளுக்கும் மாட்டிறைச்சி வழங்கப்படாது. ஆதலால், புரதம் கிடைக்கும் வகையில் ஆட்டிறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவை கொண்ட உணவு வகைகள் வழங்க இருக்கின்றனர்.
மேலும், பாகிஸ்தான் வீரர்களுக்கு வெஜிடபிள் புலாவ், பிரியாணி கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் ஹீரோக்கள் ஒன்றிணைந்த தருணம்! காணொளி காட்சியில் நிகழ்ந்த அபூர்வமான சந்திப்பு!