கடந்த பத்தாண்டில் சிறப்பாக ஆடிய டி20 வீரர்கள் 11 பேரை தேர்வு செய்து, பத்தாண்டின் சிறந்த லெவனை அறிவித்துள்ளது ஐசிசி. அந்த அணியின் தொடக்க வீரர்களாக இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா மற்று வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள ஐசிசி, 3ம் வரிசை வீரராக ஃபின்ச், 4ம் வரிசை வீரராக கோலி, ஐந்தாம் வரிசை வீரராக டிவில்லியர்ஸ், ஆறாம் வரிசையில் மேக்ஸ்வெல் ஆகியோரையும் தேர்வு செய்துள்ள ஐசிசி, விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்து அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளது.

ஆல்ரவுண்டராக பொல்லார்டையும், ஸ்பின்னராக ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கானையும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா மற்றும் மலிங்காவையும் தேர்வு செய்துள்ளது ஐசிசி.

ஐசிசி தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த டி20 அணி:

ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், ஆரோன் ஃபின்ச், விராட் கோலி, டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), பொல்லார்டு, ரஷீத் கான், பும்ரா, மலிங்கா.