Asianet News TamilAsianet News Tamil

T20 World Cup அரையிறுதிக்கு எந்த 4 அணிகள் முன்னேறும்..? இயன் சேப்பல் கணிப்பு

டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு எந்த 4 அணிகள் முன்னேறும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ian chappell predicts the semi finalists of t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 25, 2021, 1:30 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றுக்கான க்ரூப் 1-ல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை ஆகிய வலுவான அணிகள் இடம்பெற்றுள்ளன. க்ரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகளுடன் ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

க்ரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான் நியூசிலாந்து ஆகிய 3 அணிகள் தான் பெரிய அணிகள். ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடி நிறைய அனுபவத்தை பெற்றிருப்பதால் அந்த அணி கடும் சவாலளிக்கும். மற்ற 2 அணிகளான ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் சிறியவை. ஆனால் க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள அனைத்து அணிகளுமே வலுவான பெரிய அணிகள்.

எனவே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு க்ரூப் 1-ல் தான் கடும் போட்டி நிலவும். இதுவரை நடந்துள்ள சூப்பர் 12 சுற்று போட்டிகளில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. 

ian chappell predicts the semi finalists of t20 world cup

டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, டி20 உலக கோப்பையில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்திய சாதனையுடன் இந்த தொடரை தொடங்கியுள்ளது பாகிஸ்தான். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் முதல்முறையாக இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான்..!

இந்நிலையில், இந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு எந்த 4 அணிகள் முன்னேறும் என்று இயன் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, க்ரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், க்ரூப் 2-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இயன் சேப்பல் கணித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios