Asianet News Tamil

ராகுல் டிராவிட்டின் பாணியில் கொரோனாவை எப்படி எதிர்கொள்வதுனு பாருங்க.. சுவாரஸ்யமான தொகுப்பு

ராகுல் டிராவிட்டின் பாணியில் கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என்று தீவிர கிரிக்கெட் ரசிகர் ஒருவர் செம கிரியேட்டிவிட்டியுடன் டுவீட்களை செய்துள்ளார். அது செம வைரலாகி பலரது பாராட்டுகளையும் குவித்துவருகிறது. 
 

how to handle corona virus by legend rahul dravid style
Author
India, First Published Mar 17, 2020, 11:45 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா உருவான சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் சுமார் 130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கொரோனா எதிரொலியாக, கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. 

யாரிடமும் நெருங்கி பேசவோ பழகவோ வேண்டாம், கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக இருக்க வேண்டும், கைகளை கண்களிலோ, மூக்கிலோ, வாயிலோ வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில், ஒருவருக்கு இருந்தால் கூட அது எளிதாக மற்றவர்களுக்கு பரவும் அச்சுறுத்தல் இருப்பதால், மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன், தியேட்டர், ஷாப்பிங் மால்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அதேபோல பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும், தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளனர். 

இவ்வாறு கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், கொரோனா பரவாமல் தடுக்கவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுவரும் நிலையில், இவற்றை ராகுல் டிராவிட்டின் ஆட்ட பாணி, திறமைகள் மற்றும் செயல்பாட்டுகளுடன் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் டுவீட்களை செய்துள்ளார். அவை செம வைரலாகிவருகின்றன. 

1. யாருடனும் ஒட்டி உறவாடாமல், போதுமான இடைவெளி விட்டு பேசிப்பழக வேண்டும் என்ற அறிவுரையை, ராகுல் டிராவிட், அடிக்க வேண்டாத பந்துகளை எப்படி கவனமாக, போதுமாக இடைவெளிவிட்டு அடிக்காமல் விடுவாரோ அதனுடன் ஒப்பிட்டுள்ளார். 

 

2. கைகளை கழுவி சுத்தமுடன், பாதுகாப்பான கைகளாக வைத்துக்கொள்வதை, ராகுல் டிராவிட் எப்படி கேட்ச்சை மிகவும் பாதுகாப்புடன் தனது கைகளில் பிடிப்பாரோ அதனுடன் ஒப்பிட்டுள்ளார். 

3. யாரும் கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம். பொறுமையாகவும் தெளிவாகவும் கையாண்டால், எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழல்களிலிருந்தும் மீண்டு வர முடியும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், 2001ல் கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் பெற்ற இந்திய அணியை, லட்சுமணனுடன் இணைந்து ராகுல் டிராவிட் தனது நிதானமான தெளிவான பேட்டிங்கின் மூலம் காப்பாற்றினார். முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் பெற்ற போதிலும், ராகுல் டிராவிட் - லட்சுமணன் ஜோடியின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. எப்பேர்ப்பட்ட சூழலிருந்தும் மீண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதற்கு, டிராவிட் - லட்சுமணனின் இன்னிங்ஸை எடுத்துக்காட்டியுள்ளார். 

4. மோசமான சூழல்களைக்கூட மனவலிமை உள்ளவர்கள் வென்றுவிடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 2011ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்தபோதிலும் அனைவருடனும் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் டிராவிட், கடைசி வரை ஆட்டமிழக்காத ஸ்கோர் கார்டின் கிராஃபிக் கார்டை பகிர்ந்துள்ளார்.

5. பணியாளர்களை அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்து பணியாற்ற நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட, விக்கெட் கீப்பரே இல்லாத ராகுல் டிராவிட், அணிக்கு தேவைப்பட்டதால் அதையும் செய்தார். விக்கெட் கீப்பராக இல்லாவிட்டாலும் கூட அணிக்கு தேவைப்பட்டதற்காக விக்கெட் கீப்பிங்கையும் கூட செய்த ராகுல் டிராவிட்டிடமிருந்து இதை கற்றுக்கொள்ள வேண்டும்.

6. தனிப்பட்ட ஒருவரின் நலனை மட்டும் கருத்தில்கொள்ளாமல் அனைவரது நலனையும் கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, அணியின் நலனை கருத்தில்கொண்டு சச்சின் டெண்டுல்கர் 194 ரன்களுடன் களத்தில் இருந்தபோது, இன்னிங்ஸை டிக்ளேர் செய்த சம்பவத்தை அந்த ரசிகர் சுட்டிக்காட்டியுள்ளார். 

7. நீங்கள் ஒரு விஷயத்தில் மாஸ்டராகிவிட்டால் அல்லது மாஸ்டராக இருந்தால், அதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இதை ராகுல் டிராவிட் அண்டர் 19 அணிக்கு பயிற்சியளித்து இளம் வீரர்களை வளர்த்தெடுத்து 2018ல் பிரித்வி ஷா தலைமையில் உலக கோப்பையை வெல்லவைத்த சம்பவத்துடன் ஒப்பிட்டு அசத்தியுள்ளார் அந்த ரசிகர்..

இதேபோலவே 2018ல் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி அண்டர் 19 உலக கோப்பையை வென்றபோது, தி ரியல் chak de india ஹீரோ என்ற தலைப்பில் அந்த திரைப்படத்தில் ஷாருக்கான் ஏற்றிருந்த கதாப்பாத்திரத்தை நிஜ வாழ்க்கையில் எதிரொலித்த ராகுல் டிராவிட்டை, அதனுடன் ஒப்பிட்டு எழுதியிருந்த கட்டுரை இதோ.. 
தி ரியல் “Chak De India" ஹீரோ.. Great ”ராகுல் டிராவிட்”

Follow Us:
Download App:
  • android
  • ios