Asianet News TamilAsianet News Tamil

Asia Cup: இந்தியா - ஹாங்காங் போட்டி டாஸ் ரிப்போர்ட்..! இந்திய அணியில் எதிர்பார்த்திராத ஒரு அதிரடி மாற்றம்

ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

hong kong win toss opt to field against india in asia cup 2022
Author
First Published Aug 31, 2022, 7:29 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 2 அணிகளையும் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டது.

முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, இன்று ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. இந்தியா - ஹாங்காங் இடையே துபாயில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இதையும் படிங்க - Asia Cup: ஜெயித்த இந்தியா, தோற்றுப்போன பாகிஸ்தான் 2 அணிகளுக்கும் ஆப்பு அடித்த ஐசிசி

இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வளித்துவிட்டு, ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - சூர்யகுமார் யாதவுக்கு முன் என்னை பேட்டிங் ஆட இறக்கிவிட்டதற்கு இதுதான் காரணம்..! ஜடேஜா விளக்கம்

ஹாங்காங் அணி:

நிஜாகத் கான் (கேப்டன்), யாசிம் முர்டாசா, பாபர் ஹயாத், கிஞ்சித் ஷா, ஐஜாஸ் கான், ஸ்காட் மெக்கென்னி (விக்கெட் கீப்பர்), ஜீஷன் அலி, ஹரூன் அர்ஷத், ஈசான் கான், ஆயுஷ் ஷுக்லா, முகமது கஜன்ஃபர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios