Asianet News TamilAsianet News Tamil

அரியலூர் கொலை சம்பவத்துக்கு காரணம் கோலியா..? கோலியை கைது பண்ணுங்க.. கொந்தளிக்கும் ரோஹித் ரசிகர்கள்

அரியலூரில் கோலி ரசிகர் ரோஹித் ரசிகரை மது போதையில் அடித்து கொலை செய்ததையடுத்து, #ArrestKohli (கோலியை கைது பண்ணுங்க) என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகிவருகிறது.
 

here is the reason why arrest kohli hashtag trending in twitter
Author
First Published Oct 15, 2022, 2:47 PM IST

இந்தியாவே ஒரு கிரிக்கெட் தேசமாகிவிட்டது. அந்தளவிற்கு இந்தியாவில் கிரிக்கெட் கொண்டாடப்படுகிறது. சினிமாவோ, கிரிக்கெட்டோ, அந்தந்த காலக்கட்டத்தில் இருதுருவங்களாக திகழ்பவர்களின் ரசிகர்களின் மோதிக்கொள்வது காலங்காலமாக நடந்துவருகிறது.

சினிமாவில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜீத் என்பதுபோல, கிரிக்கெட்டில் கபில் தேவ் - கவாஸ்கர், சச்சின் - கங்குலி, தோனி - கோலி என ஒப்பீடுகளும், அவர்களின் ரசிகர்களும் மோதிக்கொள்வது வழக்கம் தான்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடியை எப்படி ஆடவேண்டும்..? இந்திய வீரர்களுக்கு கௌதம் கம்பீர் அறிவுரை

அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நம் தமிழகத்தில், அரியலூரில் உச்சத்தை எட்டியுள்ளது. இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ளது. அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. 

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் பொய்யூர் ரோஹித் ரசிகர் விக்னேஷ் என்பவரும், கோலி ரசிகர் தர்மராஜ் என்பவரும் ஒன்றாக இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே கோலி - ரோஹித் இருவரில் யார் சிறந்தவர் என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் விவாதம் மோதலாக முற்றியது. இந்த மோதலில் கோபமடைந்த கோலியின் ரசிகர் தர்மராஜ் கட்டுப்பாட்டை இழந்து பேட்டால் கொடூரமாக ரோஹித் ரசிகர் விக்னேஷை தாக்கியதில் விக்னேஷ் உயிரிழந்தார்.

இதையும் படிங்க - மிரட்டலான ஃபாஸ்ட் பவுலரை விட்டுட்டு 3 ஸ்பின்னர்களை எடுத்து வச்சுருக்கீங்க! முன்னாள் பவுலிங் கோச் கடும் தாக்கு

இதையடுத்து தர்மராஜை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் தான், கோலியை கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இன்று டிரெண்டாகிவருகிறது. 

கோலியோ ரோஹித்தோ அவர்கள் ஆடுவதற்கு கோடிகளில் சம்பளம் வாங்குவதுடன், கண்ட கண்ட பொருட்களை மக்கல் மத்தியில் திணிக்கும் தூதுவர்களாக விளம்பரங்களில் நடித்து,  அதன்மூலம் கோடிகளை குவிக்கும் விளையாட்டு வீரர்கள் அவ்வளவுதான். அந்தளவில் அவர்களை மதித்துவிட்டு ரசிகர்கள் கடந்துசெல்லவேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios