டி20 உலக கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடியை எப்படி ஆடவேண்டும்..? இந்திய வீரர்களுக்கு கௌதம் கம்பீர் அறிவுரை
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் வரும் 23ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடியை எப்படி ஆடவேண்டும் என்று இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஆலோசனை கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை வரும் 16ம் தேதி தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி அதன் முதல் போட்டியில் வரும் 23ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையிலும் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானைத்தான் எதிர்கொண்டது. ஆனால் அந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி.
இதையும் படிங்க - என்னை யாரும் கன்சிடர் கூட பண்றது இல்லைல..? டி20 போட்டியில் காட்டடி சதம் அடித்து கவனம் ஈர்த்த பிரித்வி ஷா
அந்த போட்டியில் இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிக்க முடியாததால் தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதற்கு காரணம், ஷாஹீன் அஃப்ரிடியின் அபாரமான பவுலிங் தான். அந்த போட்டியில் இந்திய அணியின் முக்கியமான மற்றும் டாப் 3 வீரர்களான ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரையும் தொடக்கத்திலேயே வீழ்த்திவிட்டார் ஷாஹீன் அஃப்ரிடி. அதன்விளைவாகத்தான் இந்திய அணி குறைவான ஸ்கோர் அடித்து தோற்றது.
இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகிய மூவரும் தான். அவர்கள் மூவரில் ஒருவர் பெரிய ஸ்கோர் அடிப்பது இந்திய அணிக்கு மிக முக்கியம். ஆனால் இவர்கள் மூவருமே தொடக்கத்தில் இடது கை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக திணறுகிறார்கள்.
அதிலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் அழுத்தம் அதிகம். அப்படியிருக்கையில், 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய ஷாஹீன் அஃப்ரிடியின் பவுலிங்கை எதிர்கொள்வது அவர்களுக்கு கூடுதல் அழுத்தம். எனவே பாகிஸ்தானை வீழ்த்தவேண்டுமென்றால், ஷாஹீன் அஃப்ரிடியை இவர்கள் மூவரும் திறம்பட எதிர்கொள்வது அவசியம்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது ஷமி அறிவிப்பு.! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதை எப்படி செய்வது என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார். ஷாஹீன் அஃப்ரிடியின் பவுலிங்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசிய கௌதம் கம்பீர், ஷாஹீன் அஃப்ரிடி பவுலிங்கில் அவுட்டாகாமல் சமாளித்து ஆடினால் போதும் என்று நினைக்கக்கூடாது. அவரது பவுலிங்கை அடித்து ஆடி ஸ்கோர் செய்யவேண்டும். அதுதான் அவரை எதிர்கொள்ளும் சரியான முறை. டி20 கிரிக்கெட்டில் எந்தவொரு பவுலரையும் சமாளித்தால் போதும் என்று நினைக்கமுடியாது. டி20 கிரிக்கெட்டில் எந்த பவுலராக இருந்தாலும் அடித்து ஆடவேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. ஆனால் ஓங்கி அடித்து ஆட முயற்சிக்காமல், பந்தை சரியாக டைமிங் செய்யவேண்டும் என்று கௌதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.