2021ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே.

2021ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே தேர்வு செய்துள்ளார். 2021ம் ஆண்டில் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்ததுடன், இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் மிகச்சிறப்பாக, முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரோஹித் சர்மா. 

எனவே ரோஹித் சர்மாவையும், அவருடன் இலங்கையின் திமுத் கருணரத்னேவையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்ளே, 3ம் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர இளம் வீரரான மார்னஸ் லபுஷேனை தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடி டெஸ்ட் தரவரிசையில் ரூட்டை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்த லபுஷேனை 2021ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனின் 3ம் வரிசை வீரராக தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2ம் இடத்தில் இருப்பவரும், இங்கிலாந்து அணிக்கு பேட்டிங்கில் தனி நபராக பங்களிப்பு செய்துவருபவருமான ஜோ ரூட்டை 4ம் வரிசையில் தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே. இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சன் ஆகிய இருவரையும் ஹர்ஷா போக்ளே தனது லெவனில் தேர்வு செய்யவில்லை.

5ம் வரிசை வீரராக பாகிஸ்தானின் ஃபவாத் ஆலமையும், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டையும் தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்ளே, ஆல்ரவுண்டராக ஜேசன் ஹோல்டரையும், ஸ்பின்னராக அஷ்வினையும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஷாஹீன் அஃப்ரிடி, அன்ரிக் நோர்க்யா மற்றும் கைல் ஜாமிசன் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஹர்ஷா போக்ளேவின் 2021ன் சிறந்த டெஸ்ட் லெவன்:

ரோஹித் சர்மா, திமுத் கருணரத்னே, மார்னஸ் லபுஷேன், ஜோ ரூட், ஃபவாத் ஆலம், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷாஹீன் அஃப்ரிடி, அன்ரிக் நோர்க்யா, கைல் ஜாமிசன்.