Asianet News TamilAsianet News Tamil

ஹாரிஸ் ராஃபின் அதிவேக பவுன்ஸரில் ப்ரூக்ஸின் ஹெல்மெட் க்ரில்லுக்குள் புகுந்த பந்து..! வைரல் வீடியோ

பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஹாரிஸ் ராஃபின் பவுன்ஸரில் ஹாரி ப்ரூக்ஸின் ஹெல்மெட் க்ரில்லுக்குள் பந்து புகுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

haris rauf bouncer ball gets caught in harry brooks helmet video goes viral
Author
First Published Sep 24, 2022, 10:47 PM IST

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், 3வது டி20 போட்டி நேற்று கராச்சியில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் அறிமுக தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி 22 பந்தில் 40 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் பென் டக்கெட் மற்றும் ஹாரி ப்ரூக்ஸ் ஆகிய இருவரும் இணைந்து பாகிஸ்தான் பவுலிங்கை காட்டடி அடித்தனர்.

இதையும் படிங்க - IND vs AUS: 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்.! உத்தேச ஆடும் லெவன்

பென் டக்கெட் 42 பந்தில் 70 ரன்களும், ஹாரி ப்ரூக்ஸ் 35 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 221 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. 222 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே அடித்து 63 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதையும் படிங்க - ஃபேஸ்புக்கில் ட்விஸ்ட் வைத்த தோனி.. என்ன சொல்லப்போகிறார் தல..? ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

இந்த போட்டியில் அதிசயமான சம்பவம் ஒன்று நடந்தது. பொதுவாக தரமான ஃபாஸ்ட் பவுலர்கள் துல்லியமாக வீசும் பவுன்ஸரில் பேட்ஸ்மேன்களின் ஹெல்மெட் கழண்டுவிழும் அல்லது கடுமையான அடி விழும். ஆனால் இந்த போட்டியில் 17வது ஓவரை ஹாரிஸ் ராஃப் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்த ப்ரூக்ஸுக்கு பவுன்ஸராக வீசினார். ஹாரிஸ் ராஃப் 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசிய அந்த பவுன்ஸர் பந்து ப்ரூக்ஸின் ஹெல்மெட் க்ரில்லுக்குள் புகுந்தது. பந்தை வெளியே எடுக்க முடியாமல் ப்ரூக்ஸ் திணறினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios