வரலாற்றை மாற்றுமா சிஎஸ்கே? டாஸ் வென்று கெத்தா பவுலிங் எடுத்த குஜராத் டைட்டன்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 7ஆவது ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

Gujarat Titans won the toss and Choose to bowl first against Chennai Super Kings in IPL 7th Match at M A Chidambaram Stadium rsk

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஒன்றுக்கொன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் காயம் காரணமாக இடம் பெறாமலிருந்த சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா இந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்க வாய்ப்பிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜின்க்யா ரஹானே, ஷிவம் துபே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேகா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாகர், துஷார் தேஷ்பாண்டே, முஷ்தாபிஜூர் ரஹ்மான்.

மாற்று வீரர்கள்: மதீஷா பதிரனா, ஷர்துல் தாக்கூர், ஷாயிக் ரஷீத், நிஷாந்த் சிந்து, மிட்செல் சாண்ட்னர்.

குஜராத் டைட்டன்ஸ்:

விருத்திமான் சகா (கேப்டன்), சுப்மன் கில் (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், உமேஷ் யாதவ், மோகித் சர்மா, ஸ்பென்சர் ஜான்சன்

மாற்று வீரர்கள்: சாய் சுதர்சன், சரத் பிஆர், அபினவ் மனோகர், நூர் அகமது, மானவ் சுதர்.

இதற்கு முன்னதாக, இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 5 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் 3 போட்டியிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்றது.

மேலும் இதுவரையில் நடந்த லீக் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிஎஸ்கே அணி தோற்கடிக்கவில்லை. இன்று நடக்கும் 7ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிஎஸ்கே வீழ்த்தி புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த 65 போட்டிகளில் சிஎஸ்கே 46 போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தின் சிஎஸ்கே அடித்த அதிகபட்ச ஸ்கோர் 246/5 vs ராஜஸ்தான் ராயல்ஸ் (2010). குறைந்தபட்ச ஸ்கோர் 109 vs மும்பை இந்தியன்ஸ் (2019).

சிஎஸ்கே – ஜிடி போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

ருதுராஜ் கெய்க்வாட் – 5 இன்னிங்ஸ் – 304 ரன்கள் – அதிகபட்சம் 92 ரன்கள்

விருத்திமான் சகா – 5 இன்னிங்ஸ் – 169 ரன்கள் – அதிகபட்சம் 67* ரன்கள்

சுப்மன் கில் – 5 இன்னிங்ஸ் – 162 ரன்கள் – அதிகபட்சம் 63 ரன்கள்

சிஎஸ்கே – ஜிடி போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்:

முகமது ஷமி – 5 இன்னிங்ஸ் – 7 விக்கெட்டுகள் – பெஸ்ட் 2/19

மதீஷா பதிரனா – 3 இன்னிங்ஸ் – 6 விக்கெட்டுகள் – 2/24

அல்ஜாரி ஜோசஃப் (ஜிடி) – 3 இன்னிங்ஸ் – 5 விக்கெட்டுகள் – 2/33

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios