IPL 2023:வாழ்வா சாவா போட்டியில் ஆர்சிபி அணியில் ஒரு அதிரடி மாற்றம்! RCB - GT கடைசி லீக் போட்டி டாஸ் ரிப்போர்ட்

ஐபிஎல் 16வது சீசனின் கடைசி லீக் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ்  கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

gujarat titans win toss opt to field against rcb in last league match in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் லீக் போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தான் பிளே ஆஃபிற்கு முன்னேறும் கடைசி அணியை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி.

குஜராத் டைட்டன்ஸ், லக்னோ, சிஎஸ்கே அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. கடைசி அணியாக முன்னேறுவதற்கு மும்பை - ஆர்சிபி இடையே கடும் போட்டி நிலவுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறிவிட்டது. 

ஆர்சிபி அணி கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தினால் நெட் ரன்ரேட் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். ஆர்சிபி தோற்றால் மும்பை அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெறும். எனவே வாழ்வா சாவா போட்டியில் வெற்றி கட்டாயத்துடன் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி.

பெங்களூருவில் கடும் மழையால் ஆட்டம் தாமதமானது. 7.45 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டம் 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால்  டாஸுக்கு பின் மீண்டும் மழை பெய்வதால் ஆட்டம் மீண்டும் தாமதமாகிறது.

இந்த போட்டிக்கான ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கரன் ஷர்மாவுக்கு பதிலாக ஹிமான்ஷு ஷர்மா எடுக்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வைன் பார்னெல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தசுன் ஷனாகா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி, யஷ் தயால்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios