பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன. 

பஞ்சாப் கிங்ஸ் அணி இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றியும், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 போட்டிகளிலுமே வெற்றியும் பெற்றுள்ளன. இரு அணிகளுமே இந்த சீசனை சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில், வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இரு அணிகளுமே களமிறங்கியுள்ளன.

மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விஜய் சங்கர் மற்றும் வருண் ஆரோன் ஆகிய இருவரும் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் தர்ஷன் நால்கண்டே ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, அபினவ் மனோகர்/குர்கீரத் சிங் மன், குகீரத் சிங், ரஷீத் கான், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நால்கண்டே.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் 3 போட்டிகளில் ஆடாத ஜானி பேர்ஸ்டோ இந்த போட்டியில் ஆடுகிறார். அதனால் பானுகா ராஜபக்சா நீக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

மயன்க் அகர்வால்(கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.