IPL 2023: ராஜஸ்தான் ராயல்ஸை அசால்ட்டா ஊதித்தள்ளி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

gujarat titans beat rajasthan royals by 9 wickets in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இரு வலுவான அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மோதின.. ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, சந்தீப் ஷர்மா.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, ஜோஷுவா லிட்டில், முகமது ஷமி, மோஹித் சர்மா.

IPL 2023: அவர் தான்யா சூப்பர் கேப்டன்.. சும்மா மிரட்டுறாப்ள..! ரவி சாஸ்திரி புகழும் கேப்டன் யார் தெரியுமா..?

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். அடித்து ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 20 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் தேவ்தத் படிக்கல்(12), அஷ்வின்(2), ரியான் பராக்(4), ஹெட்மயர்(7), த்ருவ் ஜுரெல்(9) ஆகிய வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 17.5 ஓவரில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ராஜஸ்தான் அணி. 

IPL 2023: இந்த லெட்சணத்துல பேட்டிங் ஆடுனா எப்படி ஜெயிக்கிறது? SRH பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய பிரயன் லாரா

119 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரிதிமான் சஹா (41), ஷுப்மன் கில் (36) நல்ல தொடக்கத்தை அமைக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா காட்டடி அடித்து 15 பந்தில் 38 ரன்களை விளாச14வது ஓவரிலேயே இலக்கை அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios