GGT vs RCBW: குஜராத்துக்கு கிடைச்ச கடைசி சான்ஸ் – ஜெயிச்சா பிளே ஆஃப் பாக்கலாம், டாஸ் வென்று பேட்டிங்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 13 ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது போட்டி இன்று நடக்கிறது. இதில் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும், 2ஆவது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்துள்ளது.
இதுவரையில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது விளையாடிய 4 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில், ஒரு போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும், 2 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியுள்ளன.
இன்று நடக்கும் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும். இந்தப் போட்டி மட்டுமின்றி அடுத்து நடக்க இருக்கும் 3 போட்டியிலும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் வெற்றி பெற வேண்டும். மேலும் மற்ற அணிகள் தோல்வி அடைந்தால் மட்டுமே குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.
கடந்த ஆண்டு நடந்த முதல் சீசனில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றது. 6 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தற்போது 2ஆவது சீசனிலும் அதே நிலை தான் தொடர்கிறது.
குஜராத் ஜெயிண்ட்ஸ்:
பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), லாரா வால்வார்ட், ஃபோப் லிட்ச்பீல்டு, வேத கிருஷ்ணமூர்த்தி, தயாளன் ஹேமலதா, அஷ்லேக் கார்ட்னர், கத்ரின் பிரைஸ், மேக்னா சிங், மன்னட் காஷ்யப், சப்னம் முகமது சகீல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
சப்னேனி மேகனா, ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷோஃபி டிவைன், ஷோஃபி மோலினெக்ஸ், ஜார்ஜியா வார்ஹாம், எக்தா பிஸ்ட், சிம்ரன் பகதூர், ஆஷா ஷோபனா, ரேணுகா தாகூர் சிங்.