டி20 உலக கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த க்ளென் ஃபிலிப்ஸ்..!

டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த நியூசிலாந்து வீரர் க்ளென் ஃபிலிப்ஸ் மிகச்சிறந்த சாதனை படைத்துள்ளார்.
 

glenn phillips massive record in t20 world cup by his ton against sri lanka

டி20 உலக கோப்பை தொடரில் க்ரூப் 1ல் நியூசிலாந்து அணியும், க்ரூப் 2ல் இந்திய அணியும் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இன்று சிட்னியில் நியூசிலாந்தும் இலங்கையும் மோதிய போட்டியில் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. டேரைல் மிட்செலும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

டி20 உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

நியூசிலாந்து அணி மிக இக்கட்டான நிலையில் இருந்தபோது களத்திற்கு வந்த க்ளென் ஃபிலிப்ஸ் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். நியூசிலாந்து அணியை தனி ஒருவனாக கரைசேர்த்த க்ளென் ஃபிலிப்ஸ் 64 பந்தில் 104 ரன்களை குவித்தார்.  அவரது சதத்தால் 20 ஓவரில் 167 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, இலங்கையை 102 ரன்களுக்கு சுருட்டி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 4ம் வரிசையில் இறங்கி சதமடித்த க்ளென் ஃபிலிப்ஸ், டி20 உலக கோப்பையில் 4ம் வரிசை அல்லது அதற்கு கீழிறங்கி சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் க்ளென் ஃபிலிப்ஸ். 

டி20 உலக கோப்பை: ராகுலுக்கு பதில் ரிஷப் பண்ட்? இந்திய அணி அதிரடி முடிவு? பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் தகவல்

மேலும், 2021ம் ஆண்டிலிருந்து டி20 கிரிக்கெட்டில் 149 சிக்ஸர்களை விளாசியுள்ள க்ளென் ஃபிலிப்ஸ், லியாம் லிவிங்ஸ்டனுக்கு (152 சிக்ஸர்கள்) அடுத்த இடத்தில் உள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios