ஆஸ்திரேலியா வீரர் கிளென் மேக்ஸ்வெல் மகனுடன் நியூ இயர் கொண்டாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு நாம் புத்தாண்டை வரவேற்போம். ஆனால், சில நாடுகளில் மாலை 3.45 மணிக்கே புத்தாண்டை கொண்டாட துவங்கி விடுகிறார்கள். பசுபிக்கில் அமைந்துள்ள சாதாம் தீவில் மாலை 3:45 மணிக்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சாதாம் தீவுகளிலில் ஜனவரி 1 சரியாக மாலை 3:45 மணிக்கு பிறக்கிறது. இவர்கள் தான் முதல் முதலில் புத்தாண்டை வரவேற்கிறார்கள்.
நியூசிலாந்தில் உள்ள மக்கள் மாலை 4:30 மணிக்கு புத்தாண்டை ஒவ்வொரு வருடமும் வரவேற்கிறார்கள். ரஷ்யாவின் ஒரு பகுதி மக்கள், மாலை 5:30 மணிக்கு புத்தாண்டை வரவேற்கின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன், சிட்னி, கான்பெரா, ஹோனியாரா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் மாலை 6:30 மணிக்கு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
இந்த நிலையில், தான் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், டிசம்பர் 31ஆம் தேதியான இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கும், ஆஸ்திரேலியா நேரப்படி மாலை 6.45 மணிக்கும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் மெல்போர்ன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் மெல்போர்ன் அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல் இடம் பெற்று விளையாடினார். இந்த நிலையில் தான் இந்த போட்டியின் போது கிளென் மேக்ஸ்வெல் தனது மகன் லோகன் மேவரிக் உடன் ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளார். மகனை வெளியில் தூக்கி வந்து பட்டாசு வெடிக்கும் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்துள்ளார்.
