MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஐபிஎல் 2023ல் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் – 3 நாட்கள் நடந்த ஃபைனல் – 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!

ஐபிஎல் 2023ல் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் – 3 நாட்கள் நடந்த ஃபைனல் – 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!

2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5ஆவது முறையாக சாம்பியனானது.

2 Min read
Rsiva kumar
Published : Dec 31 2023, 06:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115
CSK Win

CSK Win

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 2023 ஆம் ஆண்டுக்கான 16ஆவது சீசன் கடந்த மார்ச் 1 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது.

215
CSK Victory

CSK Victory

10 அணிகள் இடம் பெற்று விளையாடிய இந்த தொடரில் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் அடுத்தடுத்து வெளியேறின.

315
CSK

CSK

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பையும் இரு அணிகளும் கோட்டைவிடவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. மேலும், முதல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது.

415
Chennai Super Kings

Chennai Super Kings

எலிமினேட்டரி மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில், மும்பை வெற்றி பெறவே, குவாலிஃபையர் 2 ஆவது சுற்றில் குஜராத் அணியுடன் மோதியது.

515
Chennai Super Kings

Chennai Super Kings

இந்தப் போட்டியில் குஜராத் வெற்றி பெறவே இறுதிப் போட்டிக்கு சென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் 28 ஆம் தேதி நடக்க இருந்தது.

615
CSK Champions

CSK Champions

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ரிசர்வ் டே:

ஆனால், அகமதாபாத் பெய்த கனமழை காரணமாக ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாளுக்கு போட்டி மாற்றப்பட்டது. இதையடுத்து 29ஆம் தேதி போட்டி நடந்தது. அப்போது கூட மழை பெய்தது.

715
CSK vs GT

CSK vs GT

முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. முதல் 3 பந்துகள் மட்டுமே சிஎஸ்கே பேட்டிங் செய்த நிலையில் கனமழை பெய்யத் தொடங்கியது.

815
CSK vs GT

CSK vs GT

12.10 மணிக்கு தொடங்கப்பட்ட போட்டி:

இரவு 9.45 மணிக்கு தொடங்கப்பட்ட போட்டியானது மழையால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து நள்ளிரவு 12.10 மணிக்கு மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. மேலும், டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 15 ஓவர்களாக குறைப்பட்டு சிஎஸ்கே அணிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

915
CSK

CSK

இதில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ரஹானே, ராயுடு ஓரளவு ரன்கள் சேர்க்க, தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 32 ரன்கள் எடுக்க, ரவீந்திர ஜடேஜா வெற்றி தேடி கொடுத்தார்.

1015
Chennai Super Kings

Chennai Super Kings

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யாஷ் தயாள் கடைசி ஓவரை வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. பின்னர் 5ஆவது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா, அதனை சிக்ஸராக மாற்றினார்.

1115
CSK Family

CSK Family

கடைசி பந்தை லெக்ஸைடு திசையில் வீசவே, அதனை ஸ்கொயர் லெக் திசைக்கு ஜடேஜா திருப்பி விட, பவுண்டரி கிடைத்து சிஎஸ்கே த்ரில் வெற்றியை ருசித்தது.

1215
CSK Won 5th Time

CSK Won 5th Time

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப் போட்டி 3 நாட்கள் நடந்தது இதுவே முதல் முறையாகும். இந்த தருணத்தை சிஎஸ்கே ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது.

1315
CSK Trophy

CSK Trophy

சென்னையின் வெற்றிக்கு வித்திட்ட ரவீந்திர ஜடேஜாவை, எம்.எஸ்.தோனி அலேக்காக தூக்கினார். தோனியும் அருகில் நின்றிருந்தார்.

1415
CSK IPL Champions 2023

CSK IPL Champions 2023

இந்த வெற்றி தருணத்தோடு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்தார். இதன் மூலமாக 5ஆவது முறையாக சிஎஸ்கே டிராபியை கைப்பற்றியது.

1515
CSK Champions 2023

CSK Champions 2023

எப்போதும் டிராபியை கேப்டன்கள் தான் வாங்குவார்கள். ஆனால், தோனி, ஐபிஎல்  டிராபியை ரவீந்திர ஜடேஜா மற்றும் அம்பத்தி ராயுடுவை வாங்கச் செய்தார்.  இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக இருந்த தோனி, அடுத்த சீசனிலும் ரசிகர்களுக்காக விளையாடுவதாக அறிவித்தார். ஆனால், உடல்நிலையை பொறுத்துதான் என்றார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்
குஜராத் டைட்டன்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக்
எம். எஸ். தோனி

Latest Videos
Recommended Stories
Recommended image1
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு, SMAT போட்டிக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி
Recommended image2
சூர்யகுமார், கில்லுக்கு வாழ்வா சாவா போட்டி; தொடரைக் கைப்பற்றுமா இந்தியா..?
Recommended image3
IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved