சென்னையை சேர்ந்த தமிழ் பெண் வினி ராமனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தமிழ் முறைப்படி திருமணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல். அதிரடி பேட்டிங், அருமையான ஸ்பின் பவுலிங் என சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணியின் மேட்ச் வின்னர். ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடும் க்ளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடி 513 ரன்களை குவித்ததால் அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது ஆர்சிபி அணி. எனவே இந்த சீசனிலும் ஆர்சிபி அணிக்காக ஆடுகிறார். 

மேக்ஸ்வெல் - வினி ராமன் காதல்:

சமகாலத்தின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான க்ளென் மேக்ஸ்வெல், தமிழத்தை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வளர்ந்த வினி ராமன் என்ற பெண்ணை காதலித்துவந்த நிலையில், இவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆஸ்திரேலியாவில் ஃபார்மஸி படித்தவர் வினி ராமன். அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தல், லாக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் திருமணம் தாமதமானது. 

மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம்:

மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம் ஆஸ்திரேலியாவில் கடந்த 18ம் தேதி நடந்தது. அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் செம வைரலானது.

ஐபிஎல் தொடங்கி நடந்துவரும் நிலையில், சென்னையில் தமிழ் முறைப்படி மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம் நடந்துள்ளது. தமிழ் முறைப்படி மேக்ஸ்வெல் - வினி ராமன் முறைப்படி திருமணம் நடந்தது. அவர்கள் மாலை மாற்றிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Scroll to load tweet…
Scroll to load tweet…