அதிரடியான பேட்டிங், தேவைப்பட்டால் ஃபீல்டிங், களத்தில் தனது குறும்பான நடவடிக்கைகள் என அனைத்து வகையிலும் ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்பவர் கெய்ல். 

தற்போது தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் மெசான்ஸி சூப்பர் லீக் தொடரில் ஜோஸி ஸ்டார்ஸ் அணியில் ஆடிவருகிறார். ராக்ஸ் மற்றும் ஜோஸி ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் தனது சேட்டையால் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார் கெய்ல்.

ராக்ஸ் மற்றும் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்டார்ஸ் அணி 20 ஓவரில் 129 ரன்கள் அடித்தது. கெய்ல் ஒரு ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 130 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ராக்ஸ் அணி 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ராக்ஸ் அணி இலக்கை விரட்டும்போது, ஸ்டார்ஸ் அணி சார்பில் கெய்ல் தான் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்து பேட்ஸ்மேனின் கால்காப்பில் பட்டது. அதற்கு கெய்ல் அம்பயரிடம் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அப்போது, ஏன் அவுட் கொடுக்க மாட்ரீங்க.. அவுட் கொடுங்க.. என்று கேட்கும் ரீதியில் குழந்தை அடம்பிடித்து அழுவதை போல கிண்டலாக செய்தார். இதைக்கண்ட அம்பயரே சிரித்துவிட்டார். அம்பயர் மட்டுமல்லாது, ஸ்டார்ஸ் அணி வீரர்கள், ராக்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் என அனைவருமே சிரித்துவிட்டனர். அந்த வீடியோ இதோ...