Asianet News TamilAsianet News Tamil

இன்னும் 20 வருஷம் ஆனாலும் இதையேதான் பேசிகிட்டு இருப்பாங்க.. நீங்க ஆகுற வேலைய பாருங்கப்பா தம்பிங்களா.. கவாஸ்கர் அதிரடி

உலக கோப்பைக்கு பின்னர் ஹாட் டாபிக்காக பேசப்பட்ட மற்றும் விவாதிக்கப்பட்ட ஒரு சம்பவம் குறித்து கவாஸ்கர் அதிரடியான தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

gavaskar speaks about rohit kohli rift
Author
India, First Published Aug 9, 2019, 5:14 PM IST

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது. இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த 4ம் வரிசை பேட்ஸ்மேனை 2 ஆண்டுகளாக தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான வீரரை கண்டறிய முடியவில்லை. 

அதன் எதிரொலியாக உலக கோப்பையில் தோற்று இந்திய ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. உலக கோப்பைக்கு பின்னர் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. இந்திய அணி, ரோஹித் மற்றும் கோலி தலைமையில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதாகவும், துணை கேப்டன் என்ற வகையில் ரோஹித்தின் ஆலோசனையை கேட்காமலேயே கேப்டன் கோலி தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது. மேலும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும் ஒரு தகவல் வந்தது.

gavaskar speaks about rohit kohli rift

மேலும் உலக கோப்பை சமயத்தில் 15 நாட்கள் மட்டுமே குடும்பத்தினரை தங்களுடன் தங்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்திருந்தது. ஆனால் கேப்டன் கோலியின் அனுமதியின்றி ரோஹித் சர்மா தொடர் முழுவதும் மனைவி ரித்திகாவை தங்கவைத்திருந்ததாகவும் இதுதொடர்பாக ரோஹித்திடம் கோலி கேட்கப்போய்த்தான் பிரச்னை வந்ததாகவும் ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அதற்கு முன்பிலிருந்தே ரோஹித் - கோலி பனிப்போர் குறித்து பேசப்பட்டுவருகிறது. எனவே இதுதான் இருவரின் மோதலுக்கு காரணம் என்று கூறமுடியாது.

உலக கோப்பைக்கு பின்னர் இதுதான் ஹாட் டாபிக்காக பேசப்பட்டது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்புவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலியிடம், ரோஹித்துடனான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ரோஹித்துடன் எந்த மோதலும் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தார். 

gavaskar speaks about rohit kohli rift

அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ரோஹித்தும் கோலியும் இணைந்து நாட்டுக்காக ஒற்றுமையுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். அவர்கள் இருவருக்கு இடையே தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, அது அணியின் நலனை பாதிக்காத அளவிற்கு அணிக்காக ஒற்றுமையுடன் இருவரும் இணைந்து ஆடும் முதிர்ச்சியுடையவர்கள். 

இந்நிலையில், ரோஹித் - கோலி மோதல் குறித்த செய்திகள் குறித்து பேசிய கவாஸ்கர், ரோஹித் - கோலி இடையேயான மோதல் என்று முதன்முதலில் இதை ஆரம்பித்துவிட்டவர், கண்டிப்பாக இந்திய கிரிக்கெட் நல்லா இருக்கக்கூடாது என்று நினைத்தவராகத்தான் இருப்பார். மீடியாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம் இந்த தகவல். ஆனால் ரோஹித்தும் கோலியும் தொழில்முறை வீரர்கள். அதனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் ரோஹித் - கோலி மோதல் குறித்த பேச்சு ஓயாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios