ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக தலைமை பயிற்சியாளராக தயாராக இருக்கும் கவுதம் காம்பீர்!

ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக இந்திய அணியின் தலைமை பொறுப்பை ஏற்க கவுதம் காம்பீர் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gautam Gambhir is ready to replace Rahul Dravid as the head coach of the Indian Cricket team rsk

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் வரும் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தான், தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள கவுதம் காம்பீர் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட கவுதம் காம்பீர் அந்த அணி சாம்பியன் பட்டம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இதைத் தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் காம்பீர் தான் சரியான தேர்வாக இருப்பார் என்று பிசிசிஐ கருதியது.

எனினும், மற்ற ஐபிஎல் பயிற்சியாளர்களான ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் ஆண்டி ஃப்ளவர் ஆகியோரது பெயரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். கவுதம் காம்பீர் தான் அதற்கான தேர்வில் முன்னிலையில் இருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2014 தொடரின், 17ஆவது சீசனின் இறுதிப் போட்டியில் கேகேஆர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், கேகேஆர் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உடன் நீண்ட நேரம் காம்பீஇ உரையாடினார். இந்த உரையாடலின் நோக்கம் தெரியவில்லை என்றாலும் கூட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான வாய்ப்பு குறித்து பேசியிருக்க கூடும் என்று விவாதிக்க தூண்டியது.

இந்த நிலையில் தான் ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக கவுதம் காம்பிர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார். கேகேஆர் வழிகாட்டியாக பொறுப்பேற்றாலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக சிறப்பாக செயல்பட்டு 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றுள்ளார். தற்போது காம்பீர் ஆலோசகராக 3ஆவது முறையாக டிராபியை வென்று கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீருக்கு பயிற்சியாளராக அனுபவம் இல்லை என்றாலும், கூட ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios