Asianet News TamilAsianet News Tamil

எல்லா கிரெட்டிட்டும் தோனிக்கே..! உண்மையை உரக்க சொன்ன கம்பீர்

விராட் கோலி இன்றைக்கு தலைசிறந்த வீரராக திகழ்கிறார் என்றால், அதன் மொத்த கிரெடிட்டும் தோனியையே சேரும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

gautam gambhir feels virat kohli test career success credits goes to former captain ms dhoni
Author
Chennai, First Published Jun 22, 2020, 3:07 PM IST

விராட் கோலி இன்றைக்கு தலைசிறந்த வீரராக திகழ்கிறார் என்றால், அதன் மொத்த கிரெடிட்டும் தோனியையே சேரும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து அசத்திவருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

இதுவரை 70 சர்வதேச சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்(100 சதங்கள்), ரிக்கி பாண்டிங்(71 சதங்கள்) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இன்னும் 2 சதங்கள் அடித்தால், ரிக்கி பாண்டிங்கை முந்தி இரண்டாவது இடத்துக்கு சென்றுவிடுவார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை கூட கோலி முறியடிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதே ஃபார்மில் இன்னும் 7 ஆண்டுகள் ஆடினால், கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை தகர்த்துவிடுவார். 

gautam gambhir feels virat kohli test career success credits goes to former captain ms dhoni

மூன்றுவிதமான போட்டிகளிலும் சுணக்கமே இல்லாமல் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வரும் விராட் கோலி, ஆல்டைம் கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். இந்தியாவில் மட்டுமல்லாது, இந்தியாவிற்கு வெளியேயும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என உலகம் முழுதும் சிறப்பாக ஆடி ரன்களை குவிக்கிறார். 

இன்றைக்கு சாதனையாளராக திகழும் கோலியின் கிரிக்கெட் கெரியரிலும் தொய்வு ஏற்பட்டது. ஆம்.. 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணம் விராட் கோலியின் கிரிக்கெட் கெரியரில் படுமோசமான தொடராக அமைந்தது. அந்த சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்திடம் இந்தியா இழந்தது.

அந்த தொடரில் மொத்தமாக 5 போட்டிகளிலும் சேர்த்தே விராட் கோலி, வெறும் 134 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது பேட்டிங் சராசரி அந்த தொடரில் வெறும் 13.4 ரன்கள். அந்த சுற்றுப்பயணத்துடன் நிறைய வீரர்களின் டெஸ்ட் கெரியர் முடிந்தது.

gautam gambhir feels virat kohli test career success credits goes to former captain ms dhoni

ஆனாலும் அப்போதைய இந்திய கேப்டன் தோனி, படுமோசமாக ஆடிய கோலியை டெஸ்ட் அணியிலிருந்து கழட்டிவிடாமல் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு தொடர் வாய்ப்பளித்தார். மனவலிமை வாய்ந்த கோலி, அந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக ஆடி செம கம்பேக் கொடுத்தார். 

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் கம்பீரும், விவிஎஸ் லட்சுமணனும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அடைந்த பரிணாம வளர்ச்சியை பற்றி பேசினார்கள். 

அப்போது, 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றவர் என்ற முறையில், கோலிக்கு தோனி அளித்த ஆதரவை நன்கு அறிந்த கம்பீர், இன்று கோலி தலைசிறந்து விளங்குவதற்கான கிரெடிட் தோனியையே சேரும் என்று தெரிவித்தார். 

gautam gambhir feels virat kohli test career success credits goes to former captain ms dhoni

அதுகுறித்து பேசிய கம்பீர், 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நானும் தான் இருந்தேன். அந்த தொடரில் கோலி சரியாக ஆடாதபோதும், அவருக்கு ஆதரவாக இருந்தார் தோனி. மொத்த கிரெடிட்டும் தோனியையே சேரும். ஏனெனில் அந்த சுற்றுப்பயணத்துடன் நிறைய வீரர்களின் டெஸ்ட் கெரியரே முடிந்துவிட்டது. ஆனால் கோலிக்கு முழு பாதுகாப்பளித்து அவருக்கு ஆதரவாக இருந்தார் தோனி என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

ஒருவேளை அன்றைக்கு தோனி, கோலியை கழட்டிவிட்டிருந்தால், கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் காணாமல் போயிருக்கலாம் அல்லது மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் ஒரே ஒரு தொடர் கோலியின் திறமையை தீர்மானித்துவிடாது என்பதால், அவர் மீதுள்ள நம்பிக்கையில் அவருக்கு தனது ஆதரவளித்து வளர்த்துவிட்டார் தோனி. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios