Asianet News TamilAsianet News Tamil

#T20WorldCup பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன்! முன்னாள் வீரர்களின் அதிரடி தேர்வு

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதற்கான இந்திய அணிக்கான முன்னாள் வீரர்கள் தேர்வு செய்துள்ள ஆடும் லெவனை பார்ப்போம்.
 

gautam gambhir and deep dasguptas team india playing eleven for the match against pakistan in t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 17, 2021, 10:14 PM IST

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், இரு அணிகளும் மோதும் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஐசிசி உலக கோப்பையில் இதுவரை இந்திய அணியை ஒருமுறை கூட பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை. உலக கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணி ஆடும் அதேவேளையில், இந்தியாவுக்கு எதிரான இந்த மோசமான ரெக்கார்டை தகர்க்கும் முனைப்பில் டி20 உலக கோப்பையில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றிருக்கும் நிலையில், அந்த பிரிவில் முதல் போட்டியே இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேதான் நடக்கிறது. வரும் 24ம் தேதி துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், அந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர்கள் கௌதம் கம்பீர் மற்றும் தீப்தாஸ் குப்தா தேர்வு செய்துள்ளனர். அவர்கள் தேர்வு செய்த இந்திய அணியை பார்ப்போம்.

கௌதம் கம்பீர் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி, பும்ரா.

தீப்தாஸ் குப்தா தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:

கேஎல் ராகுல்/இஷான் கிஷன், ரோஹித் சர்மா(துணை கேப்டன்), விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, பும்ரா, வருண் சக்கரவர்த்தி. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios