Asianet News TamilAsianet News Tamil

அதை பற்றிலாம் பேச முடியாது.. திட்டவட்டமா மறுத்த கங்குலி.. காரணத்தை சொன்ன பிசிசிஐ

பிசிசிஐயின் வர்ணனையாளர் குழுவிலிருந்து சஞ்சய் மஞ்சரேக்கர் நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 
 

ganguly refuses to talk about sanjay manjrekar removal from bcci commantary panel
Author
India, First Published Mar 15, 2020, 5:04 PM IST

இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். வர்ணனையின் போதும், சமூக வலைதளங்களிலும் அவர் பேசும் சர்ச்சை கருத்துகள், அவரை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக கடந்த ஓராண்டாக அவரது கருத்துகள் கடும் சர்ச்சைகளை கிளப்பின. ஜடேஜாவை துண்டு துணுக்கு ஆல்ரவுண்டர் என்று மட்டம் தட்டினார் மஞ்சரேக்கர். அது கடும் விமர்சனத்துக்குள்ளானது. உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக ஜடேஜாவின் அபாரமான பேட்டிங்கை பார்த்துவிட்டு தனது கருத்தை வாபஸ் பெற்றதோடு, ஜடேஜாவை வெகுவாக பாராட்டினார். 

ganguly refuses to talk about sanjay manjrekar removal from bcci commantary panel

அதேபோல, வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி முதன்முதலில் ஆடிய பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது, இருட்டிய பின்னர் வங்கதேச வீரர்கள் பேட்டிங் ஆட திணறியதை கண்ட வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, லைட் வெளிச்சத்தில் பிங்க் பந்து பேட்ஸ்மேன்களின் கண்களுக்கு நன்றாக தெரிகிறதா என்று கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு சக வர்ணனையாளரான சஞ்சய் மஞ்சரேக்கர், நீங்கள் வேண்டுமானால் அதை கேட்கலாம். ஆனால் கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்ட என்னை போன்றவர்களுக்கு அந்த அவசியம் ஏற்படவில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் என்று ஹர்ஷா போக்ளேவை மட்டம் தட்டும் வகையில் பேசியிருந்தார். 

இப்படியாக தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற ரீதியிலும், தான் தான் பெரிய வீரர் என்கிற ரீதியிலும் பல முறை பலரை மட்டம் தட்டி பேசுவதுடன், மற்ற நாடுகளின் முன்னாள் வீரர்களுடனும் சமூக வலைதளங்களில் வாக்குவாதம் செய்திருக்கிறார். இவ்வாறு தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கிவந்த சஞ்சய் மஞ்சரேக்கரை வர்ணனையாளர் குழுவிலிருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. சஞ்சய் மஞ்சரேக்கரின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த பிசிசிஐ, அவரை வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கியது. 

ganguly refuses to talk about sanjay manjrekar removal from bcci commantary panel

Also Read - ரன்னே ஓட முடியாத அளவுக்கு பெரிய தொப்பை.. திறமையான பேட்ஸ்மேனை விளாசிய அக்தர்

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேட்கப்பட்டது. ஆனால் சஞ்சய் மஞ்சரேக்கரின் நீக்கம் குறித்து கங்குலி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் சஞ்சய் மஞ்சரேக்கரின் செயல்பாடுகளின் மீது திருப்தியில்லாததால் தான் அவர் வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கப்பட்டதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios