Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா!!

கேப்டன் ஆன உடனேயே கோலியின் கேப்டன்சியை தோனியுடன் ஒப்பிட முடியாது. தோனியுடன் ஒப்பிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தோனியுடன் ஒப்பிடாமல் பார்த்தால் கூட கோலியின் கேப்டன்சி மோசம் தான். கள வியூகம், பவுலிங் சுழற்சி, இக்கட்டான சூழல்களில் சாமர்த்தியமான சமயோசித திட்டங்கள் தீட்டுவது, வீரர்களை கையாளும் விதம், பவுலர்களை பயன்படுத்தும் முறை ஆகியவற்றில் ஒரு கேப்டனாக இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. 
 
gambhir feels rohit sharma will be the next captain to kohli
Author
India, First Published May 16, 2019, 10:40 AM IST

தோனி என்ற வெற்றிகரமான கேப்டனுக்கு அடுத்து இந்திய அணியை வழிநடத்தி செல்கிறார் கோலி. தோனி அனைத்துவிதமான தலைமை பண்புகளையும் கொண்ட சிறந்த கேப்டன். ஆட்டத்தின் போக்கை கணித்தல், புரிதல் ஆகியவற்றில் தோனி வல்லவர். 

மிகச்சிறந்த கேப்டனான தோனியின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படியான ஒரு சவாலை எதிர்கொள்பவர் கோலி. தோனிக்கு பின்னர் கோலி இந்திய அணியின் கேப்டன் ஆனார். அண்டர் 19 அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் கோலி. அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்றும் கொடுத்தவர். எனவே தோனிக்கு அடுத்து கோலி கேப்டன் ஆனார். 

gambhir feels rohit sharma will be the next captain to kohli

கேப்டன் ஆன உடனேயே கோலியின் கேப்டன்சியை தோனியுடன் ஒப்பிட முடியாது. தோனியுடன் ஒப்பிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தோனியுடன் ஒப்பிடாமல் பார்த்தால் கூட கோலியின் கேப்டன்சி மோசம் தான். கள வியூகம், பவுலிங் சுழற்சி, இக்கட்டான சூழல்களில் சாமர்த்தியமான சமயோசித திட்டங்கள் தீட்டுவது, வீரர்களை கையாளும் விதம், பவுலர்களை பயன்படுத்தும் முறை ஆகியவற்றில் ஒரு கேப்டனாக இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. 

ஐபிஎல்லில் கூட 4 முறை கோப்பையை வென்று ரோஹித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக திகழும் நிலையில், கோலி ஒருமுறை கோப்பையை வெல்லவே முக்குகிறார். ஐபிஎல்லில் தோனியை விட வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் திகழ்கிறார். கோலி தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பது உலகமே அறிந்தது. ஆனால் கேப்டன்சியில் அவரை விட ரோஹித் தான் பெட்டர். 

gambhir feels rohit sharma will be the next captain to kohli

கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்தவர் காம்பீர் தான். இந்நிலையில், ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோ ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்த காம்பீரிடம், இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஆப்சனாக ரோஹித் இருப்பாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த காம்பீர், ரோஹித் சர்மா 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். ஆசிய கோப்பையில் அணியை சிறப்பாக வழிநடத்தி அதையும் வென்ரு கொடுத்தார். அதனால் அடுத்த ஆப்சனெல்லாம் கிடையாது. மிக விரைவில் கோலிக்கு அடுத்த கேப்டனாக ரோஹித் இருப்பார் என்று காம்பீர் தெரிவித்தார். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios