டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு ஃபெரோஷ் ஷா கோட்லா பெயர் நீக்கப்பட்டு அண்மையில் மறைந்த அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்பட்டது. ஸ்டேடியத்திற்கு அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்பட்டதால், அந்த மைதானத்திற்கு ஃபெரோஷ் ஷா கோட்லாவின் பெயர் சூட்டப்பட்டது. 

இந்த விழா டெல்லியில் நேற்று நடந்தது. அப்போது டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்பட்டதுடன், ஒரு ஸ்டாண்டிற்கு கம்பீரின் பெயர் சூட்டப்பட்டது. மொஹிந்தர் அமர்நாத், பிஷன் சிங் பேடி வரிசையில் ஒரு ஸ்டாண்டிற்கு விராட் கோலியின் பெயர் சூட்டப்பட்டது. 

பொதுவாகவே இதுபோன்ற விஷயங்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் கவுதம் கம்பீர், இந்த சம்பவம் குறித்து மட்டும் கருத்து தெரிவிக்கவில்லை. விராட் கோலிக்கு முன்னரே டெல்லியிலிருந்து வந்து இந்திய அணியில் பெரியளவில் சோபித்து, இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு காரணமாக திகழ்ந்தவர் கவுதம் கம்பீர். 

ஆனால் கம்பீரின் பெயரில் டெல்லி ஸ்டேடியத்தில் ஸ்டாண்ட் கிடையாது. அப்படியிருக்கையில், விராட் கோலியின் பெயரில் ஒரு ஸ்டாண்ட் என்பது கம்பீரை கடுப்பாக்கத்தானே செய்யும். அதுவும் தனக்கு கொஞ்சம் கூட ஒத்துவராத கோலியின் பெயரில் ஸ்டாண்ட் என்பது கூடுதல் கடுப்பை ஏற்படுத்தியிருக்கும். அதனால்தான் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை போலும்..