யுஸ்வேந்திர சாஹலை 2011ம் ஆண்டு ஐபிஎல்லின்போது வெளிநாட்டு வீரர்களான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஃப்ராங்க்ளின் ஆகிய இருவரும் செய்த சம்பவம் குறித்து சாஹல் கூறியிருந்த நிலையில், அதுதொடர்பாக ஃப்ராங்க்ளினிடம் அவர் பயிற்சியாளராக இருக்கும் கவுண்டி அணியான துர்ஹாம் விசாரிக்க உள்ளது.யுஸ்வேந்திர சாஹலை 2011ம் ஆண்டு ஐபிஎல்லின்போது வெளிநாட்டு வீரர்களான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஃப்ராங்க்ளின் ஆகிய இருவரும் செய்த சம்பவம் குறித்து சாஹல் கூறியிருந்த நிலையில், அதுதொடர்பாக ஃப்ராங்க்ளினிடம் அவர் பயிற்சியாளராக இருக்கும் கவுண்டி அணியான துர்ஹாம் விசாரிக்க உள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் அபாரமாக பந்துவீசி 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகளுடன் Purple Cap-ஐ வைத்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக ஆர்சிபி அணியில் ஆடிய யுஸ்வேந்திர சாஹல், ஆர்சிபிக்காக அருமையாக பந்துவீசி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்து, அந்த அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்துவந்த நிலையில், 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக அவரை தக்கவைக்காமல் விடுவித்தது ஆர்சிபி அணி. சாஹலை ஆர்சிபி அணி விடுவித்தது பெரும் வியப்பாகவே இருந்தது.
இதையடுத்து ஏலத்தில் அவரை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அஷ்வின் - சாஹல் என்ற அனுபவம் வாய்ந்த ஸ்பின் ஜோடியை இறக்கிவிட்டு கெத்து காட்டுகிறது. யுஸ்வேந்திர சாஹலும் அபாரமாக பந்துவீசி 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றுகிறார்.
இந்நிலையில், அவர் ஐபிஎல்லில் அறிமுகமான 2011ம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவரது சக வீரர்கள் அவருக்கு செய்த கொடுமையான சம்பவம் குறித்து பகிர்ந்திருந்தார். அது செம பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசிய யுஸ்வேந்திர சாஹல், நான் 2011ம் ஆண்டு ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியபோது, பெங்களூருவில் நடந்த போட்டியில் ஆடிவிட்டு ஹோட்டலில் இருந்தோம். அப்போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மது அருந்தினார். அவருடன் நானும் ஜேம்ஸ் ஃப்ராங்க்ளினும்(நியூசி., முன்னாள் வீரர்) இருந்தோம். இருவரும் மது போதையில் இருந்தனர். போதையில் அவர்கள் இருவரும் இணைந்து எனது கை, கால்களை கட்டி வாயிலும் டேப் ஒட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டனர். போதையில் இருந்ததால் அவர்கள் இருவருமே என்னை மறந்துவிட்டனர். காலையிலும் அவர்களுக்கு என்னைப்பற்றி நினைவு வரவில்லை. அதன்பின்னர் காலையில் வந்த பணியாள் தான் தனது கட்டுகளை அவிழ்த்துவிட்டதாக சாஹல் கூறியிருந்தார்.
சாஹல் இந்த விஷயத்தை கூறியதையடுத்து, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜேம்ஸ் ஃப்ராங்க்ளினுக்கு சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து முன்னாள் ஃபாஸ்ட் பவுலரான ஜேம்ஸ் ஃப்ராங்க்ளின், கவுண்டி கிரிக்கெட்டில் ஆடும் துர்ஹாம் அணியின் பயிற்சியாளராக 2019லிருந்து இருவரும் நிலையில், அவரிடம் இதுகுறித்து துர்ஹாம் அணி நிர்வாகம் விசாரிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
ஃப்ராங்க்ளின் மீது சாஹல் கூறிய விஷயம் பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சாஹலின் குற்றச்சாட்டு குறித்து ஃப்ராங்க்ளினிடம் விசாரிக்கவுள்ளதாக துர்ஹாம் அணி நிர்வாகம் கூறியுள்ளது.
