இர்பான் பதானின் கணிப்பில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் இல்லை!
இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தேர்வு செய்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இடம் பெறவில்லை.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்தும் வரும் ஜூன் 1 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதில், இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை உள்பட 20 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5 ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து ஜூன் 9 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து 12 ஆம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. 15 ஆம் தேதி கனடாவை எதிர்கொள்கிறது. இதில், தகுதி பெறும் அணிகள், குரூப் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இடம் பெறுவதற்கான போட்டி தற்போது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மூலமாக தொடங்கியுள்ளது. இதில், யாரெல்லாம் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அன்கேப்டு வீரர்கள் பலரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
மாயங்க் யாதவ், யாஷ் தாகூர், அஷுதோஷ் சர்மா, ஷஷாங்க் சர்மா உள்ளிட்ட இளம் வீரர்கள் பலரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்கள் தவிர, தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா என்று பலரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், டி20 உலகக் கோப்பையில் இடம் பெறும் வீரர்கள் யார் யார் என்று கணித்துள்ளார். அதில், சஞ்சு சாம்சன் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இடம் பெறவில்லை. இந்த சீசனில் சிறப்பாக விளையாடியவர்களின் பட்டியலில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றிருக்கிறார்.
ஆனால், அவர் இடம் பெறாதது ஆச்சரியமளிக்கிறது. இர்பான் பதான் கணித்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்கள்:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், சுப்மன் கில்.