Asianet News TamilAsianet News Tamil

ராகுல் டிராவிட் பெரிய லெஜண்ட்.. அவரைத்தான் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கணும்..! முன்னாள் ஆல்ரவுண்டர் அதிரடி

ராகுல் டிராவிட் தான் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டுமென்று இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரீதிந்தர் சோதி தெரிவித்துள்ளார்.
 

former indian cricketer riteender sodhi believes rahul dravid will be appoint as next head coach of team india
Author
Chennai, First Published Jul 1, 2021, 9:15 PM IST

விராட் கோலி தலைமையிலான மெயின் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார். ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பு செய்து பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ராகுல் டிராவிட், இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்து பல இளம் வீரர்களை உருவாக்கி கொடுத்த ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தற்போது இருந்துவருகிறார்.

former indian cricketer riteender sodhi believes rahul dravid will be appoint as next head coach of team india

இந்நிலையில் தான், இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக சென்றுள்ளார். இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்பதற்கான சமிக்ஞையாகத்தான் ராகுல் டிராவிட் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது அமைந்திருக்கிறது.

இந்நிலையில், ராகுல் டிராவிட் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரீதிந்தர் சோதி, ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டுவருகிறார். தற்காலிக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டா? அடுத்த பயிற்சியாளர் அவர் தான் என்பதற்கான சமிக்ஞை தான் இது. ராகுல் டிராவிட்டின் குடும்பம் பெங்களூருவில் இருப்பதால், குடும்பத்துடன் இருக்க நினைத்திருந்தால், அவர் இலங்கைக்கு சென்றிருக்கவே மாட்டார். ஆனால், இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று இலங்கைக்கு சென்றுள்ளார் டிராவிட். டிராவிட் மாதிரியான லெஜண்ட் வீரர் வெறும் தற்காலிக பயிற்சியாளராக மட்டும் இருக்கமுடியாது. அடுத்த பயிற்சியாளராக அவரைத்தான் நியமிக்க வேண்டும் என்று ரீதிந்தர் சோதி கருத்து தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios