Asianet News TamilAsianet News Tamil

இதைவிட டீசண்ட்டா கேப்டன்சியிலிருந்து விலகுனு சொல்ல முடியாது

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் அபாரமாக ஆடிவரும் நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனுமான ரூட் சரியாக ஆடவில்லை. அதுதான் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பேட்டிங்கிலும் ஜொலிக்கமுடியாமல் கேப்டன்சியிலும் சிறந்த விளங்கமுடியாமல் ரூட் திணறிவருகிறார். 
 

former england cricketer boycott wants roop to think about continue as captain of test team
Author
England, First Published Sep 10, 2019, 5:05 PM IST

நடந்துவரும் ஆஷஸ் தொடரில் நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான வித்தியாசமாகவும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் ஸ்மித் திகழ்கிறார். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்றது ஸ்மித் தான். 

ஸ்மித்தை சமாளிப்பதே இங்கிலாந்து அணிக்கு முடியாத காரியமாகிவிட்டது. ஆஷஸ் தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இன்னும் ஒரு போட்டியே இருப்பதால், ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை இழப்பது சாத்தியமே அல்ல. அதேநேரத்தில் அடுத்த போட்டியிலும் ஆஸ்திரேலியா வென்றால் ஆஷஸ் தொடரை வென்றுவிடும். 

former england cricketer boycott wants roop to think about continue as captain of test team

உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ஆஷஸ் தொடர் பலத்த அடியாக விழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் அபாரமாக ஆடிவரும் நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனுமான ரூட் சரியாக ஆடவில்லை. அதுதான் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பேட்டிங்கிலும் ஜொலிக்கமுடியாமல் கேப்டன்சியிலும் சிறந்த விளங்கமுடியாமல் ரூட் திணறிவருகிறார். 

இந்நிலையில், ரூட்டின் கேப்டன்சி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பாய்காட், ரூட் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் சிறந்த கேப்டன் அல்ல. அவரது கேப்டன்சி அதிருப்தியளிக்கிறது. உண்மையாகவே அவர் அந்த பொறுப்புக்கு சரியான நபரா என்பதை அவரே சிந்திக்க வேண்டும். அது அவரது பேட்டிங்கை பாதிக்கிறதா என்பதையும் சிந்திக்க வேண்டும். 

former england cricketer boycott wants roop to think about continue as captain of test team

ஜோஃப்ரா ஆர்ச்சரும் பிராடும் அபாரமாக வீசிக்கொண்டிருந்தனர். ஆனால் டீ பிரேக்கிற்கு பின் ஓவர்டனையும் லீச்சையும் வைத்து தொடங்கினார் ரூட். அவரது ஃபீல்டிங் செட்டப்பும் மோசமாக இருந்தது என்று பாய்காட் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios