IPL 2023: ஃபைனலில் CSK - GT பலப்பரீட்சை..! எந்த அணி கோப்பையை வெல்லும்..? முன்னாள் வீரர்கள் கருத்து
ஐபிஎல் 16வது சீசனின் ஃபைனலில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் மோதும் நிலையில், இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து கூறியுள்ளனர்.
ஐபிஎல் 16வது சீசன் நாளையுடன் (மே 28) முடிவடைகிறது. இந்த சீசனில் சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறின.
முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற, 2வது தகுதிப்போட்டியில் மும்பையும் குஜராத்தும் மோதின.
IPL 2023: ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை தோனியுடன் ஒப்பிட்டு கவாஸ்கர் புகழாரம்
5 முறை சாம்பியன் மும்பையும் நடப்பு சாம்பியன் குஜராத்தும் மோதிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி, ஷுப்மன் கில்லின் அபாரமான சதத்தால்(129) 20 ஓவரில் 233 ரன்களை குவித்து, மும்பையை 171 ரன்களுக்கு சுருட்டி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.
நாளை (மே 28) அகமதாபாத்தில் நடக்கும் ஃபைனலில் 4 முறை சாம்பியன் சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியன் குஜராத்தும் கோப்பைக்காக மோதுகின்றன. இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து கூறியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய முகமது கைஃப், முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரு அணிகளுமே பலமான அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
ICC WTC ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்
ஃபைனல் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், சிஎஸ்கே அணி நிறைய முறை ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறது. சிஎஸ்கே அணியில் ஒவ்வொரு வீரர் மீதும் அந்த அணி நிர்வாகம் நம்பிக்கை வைக்கும். கேப்டன் தோனியும் மிகச்சிறந்த கேப்டன் ஆவார். உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை தோனி என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
சிஎஸ்கே அணி தான் ஃபைனலில் ஜெயித்து கோப்பையை தூக்க வாய்ப்பிருப்பதாக இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.