India vs Nepal: கோலி கோலி என்று கோஷமிட்ட ரசிகர்கள்; நடுவிரலை உயர்த்தி காட்டிய கௌதம் காம்பீரால் சர்ச்சை!
இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது கோலி கோலி என்று ரசிகர்கள் கோஷமிட்ட நிலையில், கௌதம் காம்பீர் நடுவிரலை உயர்த்தி காட்டியதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
விராட் கோலி மற்றும் கௌதம் காம்பீர் என்றாலே சர்ச்சை தான் என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் விராட் கோலி கோலி என்று கோஷமிட்டதால், இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் தனது நடுவிரை உயர்த்தி காட்டியதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான 5ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி நேபாள் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
India vs Nepal: ஆட்டம் காட்டிய குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், சோம்பால் கமி; மோசமாக விளையாடிய இந்தியா!
இதில், 48.2 ஓவர்களில் நேபாள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 58 ரன்களும், சோம்பால் கமி 48 ரன்களும் எடுத்தனர். பவுலிங் தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஷமி, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
India vs Nepal: ஜடேஜாவை வச்சு ஸ்கெட்ச் போட்டு நேபாள் வீரர்களை தூக்கிய ரோகித் சர்மா!
இந்த நிலையில், தான் நேபாள் அணி பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் விராட் கோலி கோலி என்று கோஷமிட்டனர். அப்போது மைதானத்திற்கு வெளியில் குடையுடன் சென்ற கௌதம் காம்பீர் ஆக்ரோஷமான நிலையில், தனது நடுவிரலை உயர்த்திக் காட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து 231 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி பேட்டிங் ஆடி வருகிறது. ஆனால், மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டால் இந்திய அணிக்கு குறைந்த ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்படும்.
போட்டியானது 45 ஓவர்களாக குறைக்கப்பட்டால் 225 ரன்களும், 40 ஓவர்களாக இருந்தால் 207 ரன்களும், 35 ஓவர்களாக இருந்தால் 192 ரன்களும், 30 ஓவர்களாக இருந்தால் 174 ரன்களும், 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருந்தால் 130 ரன்களும் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்படும். ஒருவேளை மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். அப்படி பகிர்ந்து அளிக்கப்பட்டால் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் கிடைக்கும்.
இதன் காரணமாக இந்திய அணி 2 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். நேபாள் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.