Asianet News TamilAsianet News Tamil

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிங்க..! ரோஹித் சர்மா வேண்டாம் - பிசிசிஐ முன்னாள் செயலாளர்

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக கேஎல் ராகுலை நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐ முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜகதாலே கருத்து கூறியுள்ளார்.
 

former bcci secretary sanjay jagdale opines kl rahul should appoint as next test captain of team india
Author
Chennai, First Published Jan 17, 2022, 6:28 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகிய நிலையில், அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா தான் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காயத்தால் ஆடாத காரணத்தால் தான் ராகுல் துணை கேப்டனாக செயல்பட்டார். 

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவே, டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசியுள்ள பிசிசிஐ முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜகதாலே, அடுத்து டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுபவர் நீண்டகாலம் இந்திய அணியை வழிநடத்த வேண்டும். எனவே டெஸ்ட் கேப்டனாக கேஎல் ராகுலை நியமிக்க வேண்டும் என்பதே தன் கருத்து என்று சஞ்சய் ஜகதாலே கூறியுள்ளார்.

34 வயதாகிவிட்ட ரோஹித் சர்மா இன்னும் 3-4 ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் ஆடுவார். எனவே எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீண்டகாலம் இந்திய அணியை வழிநடத்த வல்ல வீரரைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எழுந்துள்ளன. அந்தவகையில், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனாலும் ரோஹித் சர்மாவே டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios