Asianet News TamilAsianet News Tamil

தொடரை வெல்லப்போவது யார்? வாழ்வா சாவா போட்டியில் ஃபகர் ஜமான் அபார சதம்!கடைசி ODIயில் நியூசி.,க்கு சவாலான இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, ஃபகர் ஜமானின் அபார சதத்தால் 50 ஓவரில் 280 ரன்களை குவித்து, 281 ரன்கள் என்ற சவாலான இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

fakhar zaman century helps pakistan to set challenging target to new zealand in series decider last odi
Author
First Published Jan 13, 2023, 7:15 PM IST

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று கராச்சியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி:

ஃபகர் ஜமான், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஹாரிஸ் சொஹைல், அகா சல்மான், முகமது நவாஸ், உஸாமா மிர், முகமது வாசிம், முகமது ஹஸ்னைன், ஹாரிஸ் ராஃப்.

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஸ்பின் அஸ்திரம்..! யார் இந்த டாட் மர்ஃபி..?

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரைல் மிட்செல், டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன்.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாமுஜ்ம் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 21 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து திணறிய பாகிஸ்தான் அணிக்கு, தொடக்க வீரர் ஃபகர் ஜமானும் முகமது ரிஸ்வானும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 3வது விக்கெட்டுக்கு 154 ரன்களை குவித்தனர்.

ஃபகர் ஜமான் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவருமே அரைசதம் அடிக்க, 77 ரன்னில் ஆட்டமிழந்து ரிஸ்வான் சதத்தை தவறவிட்டார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடிய ஃபகர் ஜமான் சதமடித்தார். சதத்திற்கு பின் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 101 ரன்களுக்கு ஃபகர் ஜமான் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அகா சல்மான் 45 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார். ஃபகர் ஜமானின் அபார சதம், ரிஸ்வானின் அரைசதம் மற்றும் அகா சல்மானின் பங்களிப்பால் 50 ஓவரில் 280 ரன்களை குவித்து, 281 ரன்கள் என்ற சவாலான இலக்கை நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது. 

தேர்வுக்குழு கவனத்தை ஈர்க்கணும்னா 60-70லாம் போதாது; பையன் பட்டைய கிளப்பிட்டான்! பிரித்விக்கு கவாஸ்கர் புகழாரம்

ஒருநாள் தொடரை வெல்ல நியூசிலாந்து அணிக்கு 281 ரன்கள் தேவை. பாகிஸ்தான் அணி அந்த இலக்கை அடிக்கவிடாமல் நியூசிலாந்தை கட்டுப்படுத்த வேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios