Asianet News TamilAsianet News Tamil

அது உனக்கு இப்போதான் தெரியுதாப்பா.. கோப்பையை வாங்கி கொண்டாடி முடிச்சுட்டு சேட்டதானே இது

உலக கோப்பை இறுதிப்போட்டி டிரா ஆனதால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளுமே தலா 15 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதையடுத்து அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையும் வழங்கப்பட்டது. 

eoin morgan feels world cup final decision is unfair
Author
England, First Published Jul 21, 2019, 2:31 PM IST

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான இறுதி போட்டி மாதிரியான ஒரு போட்டியை காண்பது மிகவும் அரிது. உலக கோப்பை வரலாற்றில் இப்படியொரு இறுதி போட்டி இதுவரை நடந்ததில்லை, இனிமேலும் நடக்க வாய்ப்பிருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். அந்தளவிற்கு அருமையான த்ரில்லான போட்டி அது. 

லண்டன் லார்ட்ஸில் நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதின. அந்த போட்டி டிரா ஆனதால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளுமே தலா 15 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதையடுத்து அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையும் வழங்கப்பட்டது. 

eoin morgan feels world cup final decision is unfair

இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் பல முன்னாள் ஜாம்பவான்களையும் ரசிகர்களையும் அதிருப்தியடைய செய்தது. ஏனெனில் இரு அணிகளுமே கோப்பைக்கு தகுதியான அணிகள் தான். நியூசிலாந்து அணி கடுமையாக போராடியது. கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாது என்றாலும் வெற்றி சரியான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.

முன்னாள் வீரர்கள் பலரும் இந்த முடிவு குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, பவுண்டரி எண்ணிக்கையின் அடிப்படையில் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் விதியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். 

eoin morgan feels world cup final decision is unfair

இந்நிலையில், கோப்பையை வென்று அதை கொண்டாடி முடித்துவிட்டு, போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் சரியல்ல என்று கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த இயன் மோர்கன், இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் சரியானது அல்ல. இரு அணிகளுமே நன்றாக ஆடினோம் என்று இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios