உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 

வெஸ்ட் இண்டீஸ் அணி யாரும் எதிர்பாராத அளவிற்கு உலக கோப்பையில் சிறப்பாக ஆடிவருகிறது. உலக கோப்பை ஃபேவரைட்ஸ் அணியான இங்கிலாந்து, அது ஆடிய 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி முடிவில்லாமல் போனதால் ஒரு புள்ளியை பெற்றது.

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டி சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், பவுலிங் தேர்வு செய்தார். 

இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே அணிதான் ஆடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எவின் லெவிஸ் அணியில் சேர்க்கப்பட்டதால் டேரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார். ஆஷ்லி நர்ஸுக்கு பதிலாக கேப்ரியல் அணியில் சேர்க்கப்பட்டார். காயத்திலிருந்து மீண்ட ஆண்ட்ரே ரசல் மீண்டும் அணிக்கு திரும்பியதால், ரோச் நீக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ரூட், மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், பிளங்கெட், மார்க் உட். 

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ், ஷாய் ஹோப், பூரான், ஹெட்மயர், ஹோல்டர்(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், பிராத்வெயிட், கேப்ரியல், கோட்ரெல், ஒஷேன் தாமஸ்.