உலக கோப்பை தொடரின் இன்றைய முக்கியமான போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பை அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய 2 இடங்களுக்கு எந்தெந்த அணிகள் தேர்வாகும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்நிலையில், அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக மிக முக்கியமானது. 

முக்கியமான இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த உலக கோப்பையில் அபாரமாக பந்துவீசிவரும் ஃபாஸ்ட் பவுலர் ஃபெர்குசன் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய ஃபெர்குசன் இல்லாதது அணிக்கு பெரிய இழப்புதான். அவருக்கு பதிலாக டிம் சௌதி அணியில் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதே அணிதான் ஆடுகிறது. 

இங்கிலாந்து அணி:

பேர்ஸ்டோ, ராய், ரூட், மோர்கன்(கேப்டன்), ஸ்டோக்ஸ், பட்லர்(விக்கெட் கீப்பர்), வோக்ஸ், பிளங்கெட், ரஷீத், ஆர்ச்சர், மார்க் உட். 

நியூசிலாந்து அணி:

கப்டில், நிகோல்ஸ், வில்லியம்சன்(கேப்டன்), டெய்லர், லேதம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், டி கிராண்ட் ஹோம், சாண்ட்னெர், டிம் சௌதி, ஹென்ரி, ட்ரெண்ட் போல்ட்.