இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது.
டிரெண்ட்பிரிட்ஜில் நடக்கும் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணியும், ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் களமிறங்கியுள்ளன.
இதையும் படிங்க - TNPL 2022: பாபா அபரஜித் அதிரடி அரைசதம்.. திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலிரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார் பட்லர். ஆனால் அந்த 2 போட்டிகளிலுமே இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்ததன் விளைவாக, இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை வென்றுவிட்டதால் முதல் 2 போட்டிகளில் ஆடாத சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய நால்வரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க - 2022 டி20 உலக கோப்பையை கண்டிப்பா இந்த அணிதான் வெல்லும்..! ஷாஹித் அஃப்ரிடி ஆருடம்
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னோய்.
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், ஃபிலிப் சால்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், மொயின் அலி, டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், ரீஸ் டாப்ளி, ரிச்சர்ட் க்ளீசன்.
